அதானி குழுமத்தினை சேர்ந்த ஏசிசி, அம்புஜா சிமெண்ட் நிறுவனம் அதானி குழுமத்திற்கு சொந்தமானது அல்ல. இது வினோத் அதானிக்கு சொந்தமானது என்ற சர்ச்சை சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
ஆனால் இது குறித்து அதானி குழுமம் விளக்கம் கொடுத்துள்ளது எனலாம். கெளதம் அதானியின் மூத்த சகோதரர் ஆன வினோத் அதானி , அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் புரோமோட்டர் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார் என விளக்கம் கொடுத்துள்ளது.
நெருங்கிய உறவினர்
கெளதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானி ஆகியோர் அதானி குழுமத்தில் உள்ள பல்வேறு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் தனிப்பட்ட புரமோட்டர்களாகவும் உள்ளனர். வினோத் அதானி தனிப்பட்ட புரமோட்டர்களின் நெருங்கிய உடனடி உறவினர் என்பதையும் சமர்பிக்க விரும்புகிறோம். இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்யப்பட்டும் உள்ளது என அதானி குழுமம் விளக்கம் கொடுத்துள்ளது.
இதென்ன குழப்பம்?
கடந்த ஆண்டே அதானி குழுமம் சுவிஸ் சிமெண்ட் நிறுவனமான அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி நிறுவனங்களை கையகப்படுத்தியதாக அறிவித்தது. இதன் பிறகு அதானி குழுமம் சிமெண்ட் துறையிலும் இரண்டாவது பெரிய ஒரு சிமெண்ட் நிறுவனமாகவும் உருவெடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் இத்தகைய அறிவிப்புகள் வெளியான நிலையில், இந்த நிறுவனமே அதானிக்கு சொந்தமானது அல்ல, வினோத் அதானிக்கு சொந்தமான மொரிஷியஸில் உள்ளது என அறிவித்துள்ளது.
ஏன் இந்த விளக்கம்?
இது அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் குழப்பத்தில் இருந்து வந்த முதலீட்டாளர்கள், மேற்கண்ட ஏசிசி, அம்புஜா சிமெண்ட் நிறுவனங்கள் வினோத் அதானியுடையது என்ற வெளியான செய்தியின் மத்தியில் மேலும் குழப்பமடைந்தனர். இதன் காரணமாக மேற்கொண்டு அதானி குழும பங்குகள் மேலும் சரிவடைய ஆரம்பித்துள்ள நிலையில், அதானி குழுமத்தின் இந்த அறிவிப்பானது வந்துள்ளது.
இன்றைய நிலவரம் என்ன? இன்றைய நிலவரம் என்ன?
இதற்கிடையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 1843.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 679.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது, 4.88% அதிகரித்து, 973.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது, 5% அதிகரித்து, 777.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையானது 3.42% குறைந்து, 888.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அதானி பவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது, 1.54% குறைந்து, 198.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலையானது, 1.44% குறைந்து, 420.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஏசிசி நிறுவனத்தின் பங்கு விலையானது, 0.59% அதிகரித்து, 1750.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்கு விலையானது, 3.74% அதிகரித்து, 378.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications