சென்னை: அதானி குழுமத்தின் மீதான சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஷாட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனமான அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது புதிய தகவல்கள் வெளியிட்டு பகீர் கிளப்பியுள்ளது.
கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, இந்தியா இன்ஃபோலைன் நிறுவனம் மூலம் IPE Plus Fund என்ற பண்ட்-ஐ தொடங்கியுள்ளார். இந்த கணக்கில் தான் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் முதலீடு செய்து பங்குகள் வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

இந்த அனைத்து பிரச்சனைக்கும் காரணமாக IPE Plus Fund கணக்கு எப்படி உருவானது என்பதையும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு முதல் முறையாக 2023, ஜனவரி மாதம் அதானி குழுமம் செய்த முறைகேடுகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) வெளியிட்ட ஆவணங்களின் படி, அதானி குழுமம் முக்கிய மின் சாதனங்களை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் போது அதிக விலையை நிர்ணயித்து பெறப்பட்டு உள்ளதாகவும், அதன் மூலம் பணத்தைத் திருடி, பணசலவை செய்து வெளிநாட்டு நிறுவனங்களில் மறைமுகமாக முதலீடு செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அதானி வாட்ச் என்ற லாப நோக்கமற்ற அமைப்பு நடத்திய விசாரணையில், அதானியின் சகோதரர் வினோத் அதானி கட்டுப்படுத்தும் பல அடுக்குதகளை கொண்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்த பணம் சென்றடைந்தது தெரியவந்துள்ளது.
இந்த சிக்கலான பணப் பரிமாற்றத்தில், வினோத் அதானி கட்டுப்பாட்டிலுள்ள ஒரு நிறுவனம் (ATIL), வரி சலுகை நிறைந்த பெர்முடாவில் உள்ள "குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்" (GDOF) என்ற பண்டில் முதலீடு செய்துள்ளது. பின்னர், இந்த பண்ட் நிறுவனம் மொரிஷஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட IPE Plus Fund 1 என்ற மற்றொரு பண்டில் முதலீடு செய்துள்ளது.
இந்த GDOF என்ற பண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பெர்முடாவை தளமாகக் கொண்ட குளோபல் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் (GOF) என்பது பைனான்சியல் டைம்ஸ் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த GOF நிறுவனத்தை அதானி குழுமத்திற்கு தொடர்புடைய இரண்டு பேரால் பயன்படுத்தப்பட்டு அதானி குழும பங்குகளை பெருமளவில் வாங்கவும், விற்பனை செய்யவும் பயன்படுத்தப்பட்டது என்று ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சிக்கலான நிதி கட்டமைப்பை இந்தியாவின் இன்ஃபோலைன் நிறுவனம் (IIFL) நிர்வகித்து வருகிறது என்பது தான் அடுத்த முக்கியமான விஷயம். தற்போது இந்நிறுவனம் 360 ஒன் என பெயர் மாற்றம் பெற்று இயங்கி வருகிறது.
இந்த இந்தியா இன்ஃபோலைன் நிறுவனம் பல சிக்கலான நிதி கட்டமைப்புகளை உருவாக்குவதில் புகழ் பெற்றது. மேலும், ஜெர்மனியின் மிகப்பெரிய மோசடி வழக்கான வயர் கார்டு ஊழலுடனும் இந்நிறுவனம் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்துள்ளது.
இந்த சிக்கலான கட்டமைப்பில் கீழ் தளத்தில் உள்ள IPE Plus Fund என்பது மிகச்சிறிய பண்ட் நிறுவனமாகும். 2017 டிசம்பர் நிலவரப்படி, இந்த பண்டில் சுமார் 38.43 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் இருந்தது.
வினோத் அதானிக்கு 100% சொந்தமான மொரிஷியஸ் நாட்டில பதிவு செய்யப்பட்ட ஏடிஐஎல் நிறுவனத்திற்கு (Assent Trade and Investment Private Limited) 2017 மார்ச் மாத நிலவரப்படி GDOF-ல் 40.38 மில்லியன் டாலர் இருப்பு இருந்ததாக அதானி வாட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம், GDOF நிதியின் பெரும்பகுதி அதானி பணத்திலிருந்தே வந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.
IPE Plus Fund என்ற இந்த சிறிய பண்ட்-ன் நிறுவனரும், முதலீட்டு அதிகாரியின் பெயர் அனில் அஹுஜா, இவர் அதானி என்டர்பிரைசஸின் இயக்குனராக 3 முறை அதாவது 9 வருடம் பணியாற்றியுள்ளார். இவருடைய பதவிக்காலம் 2017ல் முடிந்தது, இதற்கு முன்பு அதானி பவர் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications