சந்தையில் நாம் செய்யக்கூடிய தொழில் தனித்துவமாக இருக்க வேண்டும் நம்மிடம் கிடைக்கும் பொருள் வேறெங்கும் கிடைக்கக்கூடாது மிகவும் தனித்துவமானதாக இருக்க வேண்டும் இந்த ஃபார்முலா தான் பல ஆண்டுகள் ஆனாலும் குறிப்பிட்ட நிறுவனங்கள் உலகில் தனித்து நிற்க காரணமாக அமைந்துள்ளது.அப்படி ஒரு நிறுவனம் தான் வினாடி ஆர்கானிக்ஸ்..
வலி நிவாரணியான ஐஃப்ரூபின் மாத்திரையில் சேர்க்கப்படும் மிக முக்கிய ஒரு பொருள் ஐபிபி. இதனை உலகிற்கே தயாரித்து வழங்கும் ஒரு நிறுவனம் தான் வினாடி ஆர்கானிக்ஸ். இந்த நிறுவனம் 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதனை நிறுவியர் வினோத் சாரஃப். ராஜஸ்தானில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயது முதலே படிப்பில் படு சுட்டி. தன்னுடைய 17ஆவது வயதிலேயே இவர் பட்டதாரியாக மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்தார். தன்னுடைய 19ஆவது வயதில் பிட்ஸ் பிலானியில் எம்பிஏ படித்த இவர் கோல்ட் மெடல் பெற்றார்.
படிப்பை முடித்த கையோடு டெக்ஸ்டைல் துறையில் கால்பதித்தார். 10 ஆண்டு காலம் இத்துறையில் தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட அவர் படிப்படியாக நிறுவனங்கள் மாறியதோடு பதவி உயர்வும் பெற்றார்.
பிர்லா குழுமத்தில் ஆதித்யா பிர்லாவின் தலைமையின் கீழ் இவர் மங்களூரு ரிஃபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக பொறுப்பேற்கும் வாய்ப்பு பெற்றார்.
அதேபோல கிராசிங் இண்டஸ்ட்ரீஸ், மாடர்ன் சின்டெக்ஸ், வில்வாரா குழுமம் என பல்வேறு நிறுவனங்களில் இவர் முக்கிய தலைமை பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
தன்னுடைய 40ஆவது வயதில், நாமே ஒரு மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய சிஇஓ பணியை உதறிவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கினார். அப்படி தான் 1989இல் வினாடி ஆர்கானிக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார்.
ஐசோ ப்ரோப்பைல் பென்சின் எனப்படும் ஒரு சிறப்பு மருந்தினை இவர் தயாரித்தார். அதாவது வலி நிவாரணையான ஐப்ரோபீனில் சேர்க்கப்படக்கூடிய மிக முக்கியமான ஒரு பொருள்.
தற்போது அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு இந்த கெமிக்கலை ஏற்றுமதி செய்கிறது இந்நிறுவனம். இந்த கெமிக்கலுக்கான சந்தையில் 65% இந்த நிறுவனத்திடம் உள்ளது.
கடனே இல்லாத நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தையில் அசைக்க முடியாத ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 15,249 கோடி ஆகும். பங்குச்சந்தையில் இதன் ஒரு பங்கின் மதிப்பானது 1500 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.
வினோத் சாரஃப்பின் சொத்து மதிப்பு சுமார் 15,000 கோடி ரூபாய் ஆகும். இவர் இந்தியாவில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி போன்றவர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரன் இந்தியா வெளியிட்ட சிறந்த தொழில்முனைவோர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். பின்னர் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இவருக்கு இடம் கிடைத்தது.
Story written by : Devika


Click it and Unblock the Notifications