உங்களிடம் சொந்தமாக வாகனம் இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் என்னவோ போக்குவரத்து விதிகளை மீறுவதுதான். இந்திய அரசு இதற்கான அபராதங்களை நிர்ணயித்த போதிலும்.. பலர் இந்த விதிகளை மீறுகின்றனர். 2025-ஆம் ஆண்டின் மார்ச் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறது? சாலை விதிகளை மீறினால் என்னென்ன தண்டனை கிடைக்கும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது: பெரும்பாலான விபத்துகளுக்கு முதன்மை காரணமாக இருப்பது இதுதான். இந்த குற்றத்திற்கு அபராதமாக இதற்கு முன்னர் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த அபராதத் தொகை ரூ.10,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு 6 மாத சிறை தண்டனையும் இதற்கு விதிக்கப்படலாம். ஒரு வேலை நீங்கள் மீண்டும் மீண்டும் இதே குற்றத்தை செய்து படிபட்டால் அதற்கான அபராதம் 15,000 ரூபாயாக இருக்கும். அதோடு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடலாம்.

ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது: இதற்கு முன்னர் ஹெல்மெட் இல்லாமல் பைக் அல்லது ஸ்கூட்டர் ஓட்டினால் அதற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த அபராதம் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு உங்களுடைய உரிமம் நீங்கள் பிடிபடும் நாளில் இருந்து 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படலாம்.
எனவே எப்போதும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள். இது முழுக்க முழுக்க தனி மனிதனின் பாதுகாப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட விஷயம். எனவே ஹெல்மெட் அணிவது உங்களுடைய உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி நிதி ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது: சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவதற்கு இதற்கு முன்னர் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் புதிய விதிகளின் கீழ் இந்த அபராதம் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துதல்: சிலர் வாகனம் ஓட்டும்போது மொபைல் போனில் பேசிக்கொண்டே அல்லது ஏதேனும் வீடியோக்களை பார்த்துக் கொண்டே செல்வார்கள். இதற்கு முன்னர் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்: லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இதற்கு முன்னர் 500 ரூபாய் அபராதம். ஆனால் தற்போது இந்த அபராதம் ரூ. 5000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 200 முதல் 400 ரூபாய் அபராதம் இதற்கு முன்னர் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இது 2000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ரூ.4000 அபராதம் விதிக்கப்படும்.
இருசக்கர வாகனத்தில் அதிக நபர்களுடன் பயணிப்பது: இரு சக்கர வாகனத்தில் சில இளைஞர்கள் நான்கு அல்லது ஐந்து பேரை ஏற்றுக் கொண்டு செல்வதை பார்த்திருப்போம். இந்த குற்றத்திற்கு இதற்கு முன்னர் 100 ரூபாய் அபராதம் ஆனால் தற்போது 1,000 ரூபாயாக இந்த அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது: பொறுப்பில்லாமல் வாகனம் ஓட்டி பந்தயம் வைத்துக் கொண்டு வேகமாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 5000 ரூபாய் அபராதம்.
அவசர வாகனங்களுக்கு அடிபணியாமல் இருத்தல்: ஆம்புலன்ஸ் போன்ற அவசரமாக செல்லும் வாகனங்களுக்கு வழிவிட தவறினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ஓவர்லோடு: உங்கள் வாகனத்தில் ஓவர் லோட் செய்து கொண்டு பயணித்தால் அதற்கு 20,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
சிவப்பு விளக்கை மீறுதல்: போக்குவரத்து சிக்னலை மீறி செல்லும் வாகனங்களுக்கு தற்போது 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இளம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்தால் அவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம். கூடுதலாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு வருடத்திற்கு வாகன பதிவு மற்றும் 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் தகுதி நீக்கம் ஆகியவை செய்யப்படும்.
எனவே போக்குவரத்து விதிகளை சரிவர பின்பற்றி தேவையற்ற நிதி இழப்புகளை தடுப்போம். இது உங்கள் நிதி ஆரோக்கியத்திற்கும் அதே சமயம் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்!
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications