மாசம் ரூ. 22 லட்சம் வருமானம்!! நீச்சல் குளத்த வச்சு இப்படி ஒரு பிஸ்னஸ் ஐடியாவா? நோட் பண்ணுங்க மக்களே!!

தற்போது வேலைக்கு சென்று சம்பளம் பெறுவதை தாண்டி பகுதியளவு வருமானம் ஈட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு அதிகரித்துள்ளது. இதனால் தான் வாடகை வருமானம், பங்குச்சந்தை முதலீடு, எஸ்ஐபி, உள்ளிட்டவற்றிலும் Franchise முறையில் உணவகம் , டீ கடை நடத்துவது போன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

பல்வேறு தொழில்கள் இருந்தாலும் சில தொழில்கள் வேலையை விட நல்ல வருமானம் தருபவையாக மாறிவிடுகின்றன. அந்த வகையில் ஒருவர் நீச்சல் குளம் வைத்து மாதம் தோறும் லட்சக்கணக்கில் வருமானம் பார்ப்பது அனைவரின் கவனமும் பெற்றுள்ளது. பூஜா என்பவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தனது நண்பரின் பண்ணை வீட்டில் இருக்கும் ஒரு நீச்சல் குளத்தின் மூலம் அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதைப் பற்றி பதிவிட்டுள்ளார்.

மாசம் ரூ. 22 லட்சம் வருமானம்!! நீச்சல் குளத்த வச்சு இப்படி ஒரு பிஸ்னஸ் ஐடியாவா? நோட் பண்ணுங்க மக்களே

வழக்கமாக வெயில் காலங்களிலும் வார இறுதி நாட்களிலும் குடும்பத்துடன் வெளியில் சென்று சொகுசு விடுதிகள் பண்ணை வீடுகளில் தங்கி பொழுதை போக்குவது பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் பூஜா என்பவரின் நண்பர் பண்ணை வீடு ஒன்று நடத்துகிறாராம். அதில் உள்ள நீச்சல் குளமே அவருக்கு பெரிய வருமானம் தருகிறதாம். அதாவது கோடைக் கால விடுமுறை நாட்களில் தினமும் சுமார் 700 முதல் 800 பேர் வரை அந்த நீச்சல் குளத்திற்கு வருகிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 750 பேர் வருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், ஒரு நபருக்கான நுழைவுக் கட்டணம் 100 ரூபாய் ஆகும்.

Also Read

அப்படி பார்த்தால் ஒரு நாள் வருமானம் மட்டுமே 750 x ரூ.100 = ரூ.75,000

ஒரு மாத வருமானம் (கோடை காலங்களில்): 30 நாட்கள் x ரூ.75,000 = ரூ.22.5 லட்சம்.

வெயில் காலம் முடிந்த சாதாரண நாட்களிலும் கூட தினமும் 250 பேர் வரை வருகிறார்களாம். அதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.25,000 வீதம், மாதத்திற்குச் சுமார் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்.

அவருக்கு சொந்தமான இடம் என்பதால் வருமானம் முழுவதுமே அவருக்கே கிடைக்கிறது. வேலை ஆட்களுக்கு சம்பளம் போக மீதமுள்ள பணம் முழுவதும் இவருக்கே கிடைக்கிறதாம். அவருடைய இந்த பதிவு சமூகவலைதள வாசிகளின் கவனம் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலர், நிலத்தையும் ஐடியாவையும் சரியாகப் பயன்படுத்தினால் ஒரு நீச்சல் குளம் கூட பணத்தை வழங்கும் இயந்திரமாக மாறும் என்பதற்கு இவர் உதாரணம் என கூறுகிறார்.

Recommended For You

சிலர் வெளியில் இருந்து பார்ப்பதற்கு லாபம் மட்டுமே தெரிகிறது. ஆனால் நீச்சல் குளத்தைத் தினமும் சுத்தம் செய்வதற்கான செலவு, சிசிடிவி (CCTV), மின்சாரக் கட்டணம், மற்றும் பராமரிப்பு போன்ற மறைமுகச் செலவுகளை இந்தக் கணக்கில் சேர்க்கவில்லை என்றும் தங்களது மாற்றுக்கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் கிராமத்தில் உங்களுக்கு சொந்தமாக இடம் இருக்கிறது அருகிலேயே ஒரு நகரப்பகுதி இருக்கிறது என்றால் இந்த பண்ணை இல்லம் மற்றும் நீச்சல் குளம், ஐடியாவை முயற்சி செய்து பார்க்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+