ஈரானில் மிக தீவிரமாக போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ச்சியாக ஈரானில் குண்டுகளை வீசி வருகின்றன. பதிலுக்கு ஈரான் இஸ்ரேல் மீதும் துபாய் போன்ற நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன்களை வீசி ஈரான் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
ஈரானின் இந்த தாக்குதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய இந்தியர்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு இந்திய தூதரகம் மூலம் துபாய் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கக்கூடிய இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அங்கே சிக்கியிருக்க கூடிய சுற்றுலாப் பயணிகளை மீட்டு வரவும் நடவடிக்கை எடுத்து வரக்கூடிய சூழலில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறதாம்.

அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய இந்திய நாட்டவர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் என குறிப்பிட்டு வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவி வருவதாக கல்ஃப் நியூஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீகரத்தில் வசிக்கும் இந்தியர்கள் அபுதாபியில் இருக்கக்கூடிய இந்திய தூதரகம் அனுப்பியுள்ள இந்த லிங்கை கிளிக் செய்து ங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
இதன் மூலம் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் மேலும் மத்திய அரசு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கை பற்றிய விவரங்களும் இதில் அவர்களுக்கு பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்தியர்கள் அனைவரும் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் இதன் வாயிலாக உங்களுக்கு அனைத்து முக்கியமான அப்டேட்களும் கிடைக்கும் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனவே தயவு செய்து இயன்றவரை முன்கூட்டியே இந்த லிங்கை கிளிக் செய்து இந்தியர்கள் தங்களின் தகவல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக கல்ஃப் நியூஸ் தளம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளது அதற்கு இதுபோன்ற எந்த ஒரு மெசேஜையும் தாங்கள் அனுப்பவில்லை என அதிகாரிகள் பதில் அளித்து இருக்கிறார்கள். அதேபோல துபாயில் இருக்கக்கூடிய இந்திய தூதரகமும் இதுபோன்ற எந்த ஒரு மெசேஜையும் இந்தியர்களுக்கு அனுப்பவில்லை என விளக்கம் தந்திருக்கிறதாம்.
பொதுவாகவே இந்திய தூதரகங்கள் துபாய் , அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய இந்தியர்களின் தகவல்களை வாங்கி பதிவு செய்து கொள்கிறது. ஆனால் இப்போது தான் புதிதாக ஈரான் போரை அடிப்படையாகக் கொண்டு மக்களை மீட்பதற்காக தூதரகம் அனுப்பி வைப்பதாக இந்த தகவல் வாட்ஸ் அப்பில் பகிரப்படுகிறது என சொல்லப்படுகிறது. அப்படி மக்களை மீட்கும் சூழல் ஏற்பட்டால் கொரோனா பெருந்தொற்று காலத்தைப் போல இந்திய தூதரகம் புதிதாக இ-ரிஜிஸ்ட்ரேஷன் லிங்க் அனுப்பி வைக்கும் என சொல்லப்படுகிறது.
எனவே இது ஒரு போலியான தகவல் என்றும் இதனை யாரும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எந்த ஒரு தகவலையும் அபுதாபி, துபாயில் இருக்கக்கூடிய இந்திய தூதரகங்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்றும் வாட்ஸ் அப்களில் வரும் மெசேஜ்களை நம்பாமல் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு, ஊடக அறிக்கை ஆகியவற்றை மட்டுமே பகிர வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவசர தேவைக்கு 800-46342 என்ற எண் அல்லது +971543090571 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications