தற்போது பெரும்பாலானவர்கள் வீட்டில் கணவன் மனைவி என இரண்டு பேர் சம்பாதிக்கிறார்கள். இருந்தாலும் அந்த சம்பளமே போதவில்லை எனக் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். சம்பாதிப்பது மட்டுமில்லாமல் குழந்தைகள் கல்வி, எதிர்கால நிதி தேவை என முதலீடு , சொந்த வீடு வாங்குவது என பல செலவுகள் இருக்கின்றன. ஆனால் இங்கே ஒரு நபர் 10,000 ரூபாய் சம்பளத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை நடத்துகிறார் என்ற செய்தி எக்ஸ் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
சஞ்சீவ் சிங் என்ற நபர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எங்களுடைய அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாவலராக ஒரு இளைஞர் வேலை செய்கிறார். அவருக்கு 25 வயதுக்குள் தான் இருக்கும். இரண்டு இடங்களில் அவர் வேலை பார்க்கிறார் 10,000 ரூபாய்க்குள் தான் அவருக்கு வருமானம் வருகிறது. அவருக்கு தற்போது மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த 10,000 ரூபாய்க்கு கீழ் இருக்கக்கூடிய வருமானத்தில் தான் அவர் அவருடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என ஐந்து பேர் கொண்ட குடும்பம் நடத்தப்படுகிறது என கூறியிருக்கிறார்.

நாமெல்லாம் 25 வயதில் தான் வேலைக்கு செல்ல தொடங்குகிறோம் ஆனால் இந்த இளைஞருக்கு இந்த வயதிலேயே 5 பேர் கொண்ட குடும்பத்தின் சுமை வந்து விழுந்து விட்டது. இவரை போல பல இளைஞர்களும் இந்த வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், கொள்கைகளும் விழிப்புணர்வும் யாருக்கு கட்டாயம் தேவைப்படுகிறதோ அவர்களை சென்றடைவதே இல்லை என்பதையே இது காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு எக்ஸ் பக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையையும் நூற்றுக்கணக்கானவர்களின் பின்னூட்டங்களையும் பெற்றுள்ளது. ஒரு நபர் பலரும் இந்தியாவில் நிதி சார்ந்த அறிவும் விழிப்புணர்வும் ஏராளமான மக்களுக்கு சென்று சேர்வதே இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு நபர் ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு உணவளிப்பதற்காக இவர் இரண்டு வேலைக்கு செல்கிறார், குழந்தைகளை வளர்க்கவும் ஆளாக்கவும், இனி இவர் பாடுபட வேண்டும் என கூறியிருக்கிறார்.
ஒரு நபர் அந்த இளைஞருக்காக பாவம் பார்ப்பதை விட்டுவிட்டு உங்கள் அப்பார்ட்மெண்டில் இருக்கும் அனைவரும் அவருக்கு சேர்த்து சம்பளம் கொடுக்கலாமே என கேள்வி எழுப்பி இருக்கிறார். ஒரு பயனர் இளம் வயதிலேயே குழந்தை பெற்றுவிட்டார்கள் இவர்கள் 45 வயது ஆகும்போது மூன்று பிள்ளைகளும் வருமானம் ஈட்ட தொடங்கி இருப்பார்கள் என கூறியிருக்கிறார். பலரும் பாதுகாவலர் வேலைக்கு பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளமா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications