இந்தியர்களுக்கு எப்போதும் மண், பொன் மீது ஆசை குறையவே குறையாது, இதில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி-யும் விதிவிலக்கல்ல.
2020 கொரோனா காலத்தில் விராட் கோலி தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள மும்பையில் இருக்கும் வீட்டை காலி செய்துவிட்டு மும்பைக்கு அருகில் உள்ள அலிபாக் என்னும் இடத்தில் தான் வாங்கிய வீட்டில் வசித்து வந்தனர்.
ஒட்டுமொத்த செலிப்ரிட்டி உலகமும் தற்போது விராட் கோலி வீட்டை பற்றித் தான் பேசி வருகிறது.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகிய இருவரும் இணைந்து மும்பை-யில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலிபாக் பகுதியில் Zirad என்னும் கிராமத்தில் வாங்கிய வீட்டில் கொரோனா தொற்றுப் பாதிப்பு தனியும் வரையில் சில மாதம் தங்க முடிவு செய்தனர்.
விடுமுறை வீடு
இதைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா அலிபாக் பகுதியில் புதிய மற்றும் ஆடம்பர வீட்டை விடுமுறை வீடாக வாங்க முடிவு செய்தனர். ஆனால் இந்த வீட்டில் பல மாதம் தங்குவதற்கான வாய்ப்புக் கிடைத்தது மூலம் இருவருக்கும் இந்தப் பகுதியில் இருக்கும் வீடு மிகவும் பிடித்துப் போனது. இதனால் இந்த வீட்டை பல வகையில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா மெருகேற்றியுள்ளனர்.
Avas Living நிறுவனம்
இந்த வீட்டிற்காக விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா Avas Living நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டர் சுசேன் கான் மற்றும் சர்வதேச ஆர்கிடெக்சர் நிறுவனமான SAOTA நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஒரு வருடமாகப் பல ஆலோசனை கூட்டத்திற்குப் பின்பு இந்த வீடு கட்டப்பட்டு வருகிறது என AVAS Wellness சிஇஓ மற்றும் நிறுவனரான ஆதித்யா கிலாசந்த் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி
இந்த வீடு மொத்தமும் விராட் கோலியின் ஆசைக்கு இணங்க ஒரு கலக்கலான வீக்எண்ட் ஹோம் ஆக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டை மார்டன் மற்றும் கிளாசிங் டெக்கார் மூலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
13 கோடி ரூபாய்
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா அலிபாக் AWAS கிராமத்தில் வாங்கிய வீட்டின் விலை 10.5 கோடி ரூபாய் முதல் 13 கோடி ரூபாய் வரையில் மதிப்பிடப்படுகிறது. 4BHK ஆடம்பர வில்லா Mandwa Jetty பகுதியில் இருந்து வெறும் 10 நிமிடத்தில் செல்லும் அளவில் தான் உள்ளது.
முக்கிய அம்சங்கள்
4 பெட்ரூம், 2 கார்களைப் பார்க் செய்யக்கூடிய கராஜ், அவுட்டோர் டைனிங், பிரைவேட் பூல், எனப் பல வசதிகள் இந்த வீட்டில் உள்ளது. வீட்டை விடவும் வீட்டுக்கு வெளியில் அதிக நேரத்தில் செலவிடப்படும் வகையில் இந்த வீடு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடு ரிஜிஸ்டர் செய்யப்பட்ட 14-18 மாதத்தில் தயாராகும்.
7 ஏக்கர் நிலம்
விராட் கோலி செப்டம்பர் மாதம் அலிபாக் பகுதியில் 2.54 ஏக்கர் மற்றும் 4.91 ஏக்கர் நிலத்தைச் சுமார், 19.24 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி வாங்கியுள்ளனர். இந்த இடத்திற்காக முத்திரைத் தாள் கட்டணமாக 1.15 கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளனர்.
அலிபாக் ஹாட்ஸ்பாட்
மும்பையில் அலிபாக் என்பது ஒரு கடற்கரையோர பகுதியாக இருக்கும் நிலையில், வெளிநாடுகளைப் போல் மும்பையின் பணக்காரர்களிடையே இப்பகுதி பிரபலமாக விளங்குகிறது, இந்த அலிபாக். பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் மத்தியில் அலிபாக் புதிய ஹாட்ஸ்பாடாக உருவெடுத்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications