இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவரும், ஆர்சிபி அணியில் ஸ்டாராகவும் இருக்கும் விராட் கோலி சமீப காலமாக ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவிலான பணத்தை முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே தனது ஹோட்டல் வர்த்தகத்தை பல நகரங்களில் விரிவாக்கம் செய்வதில் பிசியாக இருக்கும் விராட் கோலி.. தனது விளம்பரம், ஹோட்டல், பல்வேறு முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை முக்கிய சொத்துக்களில் முதலீடு செய்து வருகிறார்
விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா மகாராஷ்டிராவின் கடற்கரை ஊரான அலிபாக்கில் 5.19 ஏக்கருக்கும் மேலான நிலத்தை வாங்கியுள்ளனர். ராய்கட் மாவட்டத்தில் உள்ள ஜிராட் கிராமத்தில் இரண்டு பிளாட்களாக இந்த நிலத்தை அலிபாக் பகுதியில் வாங்கியுள்ளனர். இந்த 5.16 ஏக்கர் நிலத்திற்காக சுமார் 37.86 கோடியை கொடுத்துள்ளனர் விராட் மற்றும் அனுஷ்கா.

இந்த நில விற்பனைக்கான பதிவு செவ்வாய்க்கிழமை நடந்ததுள்ளதாக CRE Matrix என்ற நிறுவனத்தின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவரான விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா இந்த நிலத்தை வாங்கியது மூலம் மீண்டும் அலிபாக் சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பகுதியில் விராட் கோலி ஏற்கனவே ஒரு நிலத்தை வாங்கியிருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக இப்பகுதியில் நிலத்தை வாங்கியுள்ளார்.
2022-ல் விராட் கோலி மற்று்ம அனுஷ்கா ஷர்மா ஆகியோர் அலிபாக்கில் சுமார் 8 ஏக்கர் நிலத்தை வாங்கி பண்ணை வீடு (farmhouse) கட்ட திட்டமிட்டிருந்தனர். இப்போது வாங்கிய நிலத்துடன் சேர்த்து மொத்தம் 13 ஏக்கருக்கும் மேல் நிலம் இவர்கள் அலிபாக்-ல் வாங்கியுள்ளனர்.
அலிபாக்-ல் விராட் கோலி மட்டும் அல்லாமல் பல பிரபலங்கள் தொழிலதிபர்கள் நிலத்தை வாங்கி வருகின்றனர். அலிபாக் மும்பையின் அருகில் உள்ள கடற்கரை பகுதியாகும். மும்பை துறைமுகத்திற்கு எதிரே அமைந்துள்ள இந்த ஊர் சமீப காலங்களில் பிரீமியம் ரெசிடென்ஷியல் சந்தையாக மாறி வருகிறது.
மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க், படகு மற்றும் ஸ்பீட் போட் சேவைகள் காரணமாக தெற்கு மும்பையிலிருந்து அலிபாக் செல்லும் பயண நேரம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இப்பகுதி தற்போது பெரும் பணக்காரர்களின் முக்கிய ஸ்பாட் ஆக மாறி வருகிறது.
இதனால் மும்பையில் உள்ள பெரும் பணக்காரர்கள் அடர்த்தியாக பகுதிகளில் வசிப்பதை காட்டிலும் இத்தகைய விசாலமான இடத்தில் வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளை அமைக்க அலிபாக்கை தேர்வு செய்கின்றனர். கடந்த 5 வருடத்தில் பெரிய அளவிலான, அதிக மதிப்பிலான நில ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவதால், இந்த பகுதி மும்பையின் பிரீமியம் வசிப்பிட சந்தையாக உருவெடுத்து வருகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications