விராட் கோலி இவருடைய புகழுக்கும், ரசிகர்களுக்கும் வான் உயரம் மட்டுமே எல்லை, கோலி சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது மட்டும் அல்லாமல் வருமானம் ஈட்டும் வழிகளை தான் கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போதே உருவாக்கியதால் இன்று அவருடையை மொத்த பிஸ்னஸ் மற்றும் சொத்து மதிப்பு 1050 கோடி ரூபாயாக உள்ளது.
எந்தொரு சிறப்பான கிரிக்கெட் வீரராக இருந்தாலும் ஆதிக்கம் நிறைந்த காலம் என்பது 15 முதல் 20 வருடம் மட்டுமே. இதை சரியாக உணர்ந்துக்கொண்ட பல கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டை தாண்டி பல துறையிலே பிஸ்னஸ் துவங்குவது மட்டும் அல்லாமல் நீண்ட கால வர்த்தகத்தையும் வருமானம் ஈட்டும் வழியையும் உருவாக்கிகொள்கின்றனர்.

இப்படி விராட் கோலியின் 1050 கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய வர்த்தகத்தையும், பொறுப்பையும் தனது நீண்ட கால நண்பரின் கையில் கொடுத்துள்ளார். ஆம் விராட் கோலி பல பிராண்டுகளின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாழ்நாள் முழுக்க வருமானம் ஈட்டித்தரும் வர்த்தகம் One8.
விராட் கோலி செய்யும் பல பிஸ்னஸ்-களில் ஒன்று இது, ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ரெஸ்டாரென்ட் துறையில் அசத்தும் ஒரு பிராண்ட் தான் One8, இது விராட் கோலியின் ஜெர்ஸி நம்பர் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. One8 ரெஸ்டாரென்ட் டெல்லி, கொல்கத்தா, புனே, மும்பை ஆகிய இடங்களில் உள்ளது.
இந்த One8 commune எனப்படும் ஹோட்டல் நிறுவனத்தை விராட் கோலி தனது பால்ய நண்பரான வர்த்திக் திஹாரா பொறுப்பில் விட்டது மட்டும் அல்லாமல் தனது நண்பரை பார்ட்னராகவும் மாற்றியுள்ளார். விராட் கோலி போல் வர்த்திக் திஹாரா கிரிக்கெட் வீரர் தான், அன்டர் 17 டெல்லி அணிக்காக விளையாடியவர்.
வர்த்திக் திஹாரா எந்த அளவுக்கு முக்கியமெனிவில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா-வின் பிரம்மாண்ட திருமணத்திற்கு மிகவும் முக்கியமான குடும்ப உறுப்பினர்களை மட்டுமே அழைக்கப்பட்டு இருந்த நிலையில் வர்த்திக் திஹாரா-வும் அழைக்கப்பட்டு இருந்தார்.
இதேவேளையில் வர்த்திக் திஹாரா விரைவில் True Palate Hospitality என்ற நிறுவனத்தை துவங்க உள்ளார், இந்த நிறுவனம் One8 பிராண்டின் கிளை நிறுவனமாக இருக்கும். True Palate Hospitality டெல்லி என்சிஆர், புனே, பெங்களூரில் பல கிளை ஹோட்டல்களை திறக்க திட்டமிட்டு உள்ளது.
விராட் கோலி மற்றும் வர்த்திக் திஹாரா இணைந்து இயக்கும் One8 ஹாஸ்பிடாலிட்டி பிராண்ட் மதிப்பு மட்டும் 112 கோடி ரூபாய், One8 ஹோட்டல்கள் ஆடம்பர பிரிவில் வரும் வேளையில், One8 True Palate Hospitality நடுத்தர அல்லது மிட் ப்ரிமியம் பிரிவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications