விராட் கோலி வீட்டில் காலாட்டிக்கொண்டே ரூ.1 கோடி சம்பாதிக்கிறார்.. எப்படி தெரியுமா..?

ரியல் எஸ்டேட் துறையும், தங்கம் மீதான முதலீடும் எப்போதும் வீண்போகாது, இந்தியா முழுவதும் சொந்த வீடு வாங்குவது வேஸ்ட், வாடகை வீடே போதுமானது என்ற பரப்புரை அதிகரித்து வருகிறது. ஆனால் இதே காலக்கட்டத்தில் பெரும் பணக்காரர்கள் கண்களை மூடிக்கொண்டு வீடுகளையும், நிலத்தையும் வாங்கி வருகிறார்கள்.

இந்த நிலையல் கிரிக்கெட் வீரர் விராட் கோலி குருகிராமில் சில வருடங்களுக்கு முன்பு வாங்கிய தனது 18,430 சதுர அடி பரப்பிலான அலுவலக கட்டடத்தை மைண்டு இன்டகிரேடட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார்.

விராட் கோலி வீட்டில் காலாட்டிக்கொண்டே ரூ.1 கோடி சம்பாதிக்கிறார்.. எப்படி தெரியுமா..?

இதுபற்றி ரியல் எஸ்டேட் டேட்டா அனலிடிக்ஸ் நிறுவனமான சிஆர்இ மேட்ரிக்ஸ் அறிக்கையின்படி விராட் கோலியின் கட்டடம் ஆண்டுக்கு ரூ.1.27 கோடி வாடகைக்குத் தரப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, குருகிராமில் உள்ள செக்டார் 68ல் அமைந்துள்ள ரீச் கொமர்சியா நிறுவன டவரில் மொத்தம் 18,430 சதுர அடி பரப்பளவைக் கொண்ட 12 அலுவலக இடங்களை குத்தகைக்கு விட்டுள்ளார். ஒரு மாதத்துக்கு சுமார் ரூ.8.85 லட்சம் மாத வாடகையில் ஒப்பந்தம் முடிக்கப்பட்டது.

இந்த பரிவர்த்தனையில் பதிவுக் கட்டணமாக ரூ. 50,010 உடன் 3.83 லட்சம் ரூபாய் முத்திரைக் கட்டணம் செலுத்தப்பட்டது. குத்தகை பெற்ற Mynd Integrated Solutions Pvt Ltd, தில்லியை தளமாகக் கொண்ட நிறுவனம். ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலியின் பதிவு செய்யப்பட்ட ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி (ஜிபிஏ) ஹோல்டரான விகாஸ் கோஹ்லி மூலம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

விராட் கோலி வீட்டில் காலாட்டிக்கொண்டே ரூ.1 கோடி சம்பாதிக்கிறார்.. எப்படி தெரியுமா..?

பரிவர்த்தனைக்கான முத்திரை-கட்டணப் பதிவு ஜூன் 22, 2023 அன்று நடந்தாலும், ஒப்பந்தம் பற்றிய ஆவணங்கள் மார்ச் 2024 வரை முடிக்கப்படவில்லை. ஆவணங்களின்படி,
குத்தகையானது மார்ச் 28, 2023 இல் தொடங்கி ஒன்பது ஆண்டுகள் நீடிக்கும். ஒப்பந்தப்படி வாடகைப் பணம் ஜூலை 1, 2023 அன்று தொடங்கியது.

அத்துடன் ஆண்டுக்கு ஐந்து சதவீத வாடகை உயர்வு இருக்கும் என்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன, அதே சமயம் பொதுவான பகுதி பராமரிப்பு கட்டணம் ஒரு சதுர அடிக்கு மாதம் ரூ.14 ஆகும்.

கடந்த சில மாதங்களில் குருகிராம் உள்பட தில்லி- என்சிஆர் பகுதியில் பல குறிப்பிடத்தக்க சொத்துகள் விற்பனையாகியுள்ளன. இதில் ஜனவரி 2024 இல், வெஸ்போக் லைஃப்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனரும், வி பஜார் சிஎம்டி ஹேமந்த் அகர்வாலின் மனைவியுமான ஸ்மிதி அகர்வால், குருகிராமில் உள்ள டிஎல்எஃப் மூலம் 95 கோடி ரூபாய்க்கு தி கேமிலியாஸில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார்.

பிப்ரவரி 2023 இல், இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியின் மனைவி வசுதா ரோஹத்கி, தில்லியில் உள்ள கோல்ஃப் லிங்க்ஸின் மேல்தட்டுப் பகுதியில் 2,100 சதுர கெஜம் (தோராயமாக 18,900 சதுர அடி) கொண்ட பங்களாவை ரூ.160 கோடிக்கு வாங்கினார்.

பின்னர், அக்டோபர் 2023 இல், குருகிராமின் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் டிஎல்எப்பின் தி கேமிலியாஸில் உள்ள 11,000 சதுர அடி அபார்ட்மெண்ட் மறுவிற்பனை பரிவர்த்தனையின் மூலம் 100 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றது.

Story Written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+