2023 ஐசிசி உலகக் கோப்பையின் போது சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்த விராட் கோலி, கிரிக்கெட் மேஸ்ட்ரோ ஆவார்.
இந்தியாவின் உலகளாவிய அடையாளமாகவும் பெருமையாகவும் விளங்கி வரும் விராட் கோலி பல கிரிக்கெட் சாதனைகளை படைத்தது மட்டுமல்லாமல், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பையும் கொண்டு உள்ளர்.

விராட் கோலியின் மொத்த சொத்து மதிப்பில், உயர்தர கார்கள், ஆடம்பரமான வீடுகள், டிசைனர் ஆடைகள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு. கிரிக்கெட் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் செழிப்பான வாழ்க்கையை அவருக்கு வழங்கியுள்ளது.
அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சேர்ந்து, கோலி மும்பையில் ஒரு ஆடம்பரமான இல்லத்தை சொந்தமாக வைத்திருக்கிறார். அவர்களின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது மும்பை அலிபாக் வீடு.
2022 ஆம் ஆண்டில், விராத் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இணைந்து சுமார் 19 கோடி ரூபாய்க்கு மதிப்பில் 8 ஏக்கர் நிலத்தை வாங்கினர். பின்னர் அவாஸ் கிராமத்தில் ரூ.13 கோடி மதிப்புள்ள அலிபாக், பங்களாவை கட்டினர்.
மண்ட்வா ஜெட்டியில் இருந்து வெறும் 10 நிமிடங்களில் அமைந்துள்ள அலிபாக் பங்களா ஆடம்பரத்துக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. இதில் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படும் குளம், ஒரு பெஸ்போக் சமையலறை, நான்கு குளியலறைகள், ஒரு ஜாக்குஸி, ஒரு பரந்த தோட்டம், குளோஸ்டு பார்க்கிங், பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பல வசதிகள் உள்ளன.
சமீபத்தில், இந்திய கிரிக்கெட் ஐகான் அவரது புதிய விடுமுறை இல்லத்தை சோசியல் மீடியாவில் பகிரந்து கொண்டார். இது புகழ்பெற்ற கட்டிடக்கலை நிறுவனமான SAOTA வின் பிலிப் ஃபூச்சியின் வழிகாட்டுதலின் கீழ், 10,000 சதுர அடி பரப்பளவில், அதன் கட்டடக்கலை வடிவமைப்பில் மூல ட்ராவெர்டைன்கள், இத்தாலிய பளிங்கு, பழமையான கற்கள் மற்றும் துருக்கிய சுண்ணாம்புக் கற்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகிறது.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் மொத்த சொத்து மதிப்பு 1,300 கோடியை தாண்டியுள்ளது. கோலியின் நிகர மதிப்பு தோராயமாக ரூ. 1,050 கோடியாக உள்ளது.
அதே சமயம் நடிகை மற்றும் தயாரிப்பாளரான அனுஷ்கா ஷர்மாவின் நிகர மதிப்பு ரூ.255 கோடி ஆகும். 34 கோடி மதிப்பிலான 7,171 சதுர அடி பரப்பளவில் மும்பையில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் தம்பதிகள் இப்போது வசிக்கின்றனர். இதுதவிர, கோலிக்கு குருகிராமில் ரூ.80 கோடி மதிப்புள்ள பங்களா உள்ளது.
இந்த பவர் ஜோடியின் வாகன கலெக்ஷனில் ரேஞ்ச் ரோவர் வோக், பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர், ஆடி க்யூ8, ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி போன்ற உயர்தர கார்கள் உள்ளன.





More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications