இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் கிரிக்கெட் வீரரும் ஆரக்கிள் சாப்ட்வேர் இன்ஜினியருமான 32 வயதான சௌவ்ரப் நேத்ராவால்கர் திடீரென்று சமூக ஊடகங்களில் ஒரு ஹீரோவாக வலம் வருகிறார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவன்களான விராட் கோலியையும், ரோஹித் சர்மாவையும் தனது அபார பந்து வீச்சில் வீழ்த்தியதால் அவருக்கு ஆன்லைனில் ரசிகர்கள் பட்டாளம் குவிந்து வருகிறது.

சௌரவ் நேத்ராவால்கரின் இந்தத் திறமையைப் பாராட்டி சமூக தளங்களில் ஏராளமான மீம்ஸ்களும் வேடிக்கையான பதிவுகளும் இடப்பட்டு வருகின்றன.
சௌரவ் நேத்ராவால்கரின் கிரிக்கெட் பயணம் இந்தியாவில் 2010 ஆம் ஆண்டில் அண்டர் 19 உலகக் கோப்பையில் தொடங்கியது. அப்போது அவர் அமெரிக்காவின் பிரபலமான கார்னெல் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைப் படித்து வந்தார். அங்கு அவருக்கு கிரிக்கெட்-ஐ முழு நேரமாக விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இப்போது அமெரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராகத் திகழ்கிறார் சௌரவ் நேத்ராவால்கர். சர்வதேச அரங்கில் அவர் பாகிஸ்தான், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரே கலக்கியுள்ளார்.
பாகிஸ்தானுடனான போட்டியில் சூப்பர் ஓவரில் முன்னணி வீரர்களின் விக்கெட்களைக் கைப்பற்றி முக்கியப் பங்கை ஆற்றினார். அதேபோல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் விக்கெட்களை பறித்தார். டி20 உலகக் கோப்பையில் விளையாடும் கனவில் இருக்கிறார் சௌரவ் நேத்ராவால்கர்.
சௌரவ் நரேஷ் நேத்ராவால்கர் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதியன்று பிறந்தவர். அமெரிக்க கிரிக்கெட் அணியில் விளையாடும் அவர் ஒரு இடதுகை மீடியம் ஃபாஸ்ட் பௌலர் ஆவார்.
முன்னதாக இந்தியாவுக்காக அண்டர் 19 அணியில் விளையாடியுள்ளார். அவரது கிரிக்கெட் பயணம் மும்பைக்காக ரஞ்ி கோப்பையில் 2013-14 இல் தொடங்கியது. இப்போது ஹெச்பி1 விசாவில் அமெரிக்காவில் ஆரக்கிள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணி புரிகிறார்.
2009இல் ஏர் இந்தியா ஸ்போர்ட்ஸ் ஸ்காலர்ஷிப் பெற்று படித்துக் கொண்டிருந்தபோது பெங்களூரில் நடந்த ஒரு போட்டியில் யுவராஜ் சிங்கின் வீரரின் விக்கெட்டை வீழ்த்தியபோது எல்லாரது கவனத்தையும் கைப்பற்றினார். பிசிசிஐ கார்ப்பொரேட் டிராபிக்காக ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னாவிடம் அறிமுகமானார்.
பிசிசிஐ கார்ப்பொரேட் டிராபியில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றி சாதனை படைத்தார் சௌரவ் நேத்ராவால்கர். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2010 ஐசிசி முத்தரப்பு தொடரில் இந்தியாவுக்காக விளையாடி 8 விக்கெட்களை நேத்ராவால்கர் கைப்பற்றினார்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications