இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் செயல் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய பேட்டிங் திறமை மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளார் விராட் கோலி. குறிப்பாக சமூக வலைதளங்களில் அவரை பின் தொடர்பவர்கள் அதிகம்.
விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர். அவ்வப்போது விராட் கோலி வெளியிடும் படங்கள் , அனுஷ்காவுடன் வெளியிடும் படங்கள் பதிவுகள் எல்லாமே டிரெண்டாக கூடியவை. பதிவு போட நொடியிலேயே கோடிக்கணக்கான லைக்குகளை பெறுபவர். கிட்டதட்ட 274 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ள விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் நேற்று திடீரென மாயமானது. இன்ஸ்டாகிராமில் விராட் கோலியின் புரோஃபைலை தேடிய போது user not found என வந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி தள்ளினர்.

இதன் காரணமாக சமூக வலைதளங்கள் எங்கும் விராட் கோலிக்கு என்ன ஆச்சு, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை deactivate செய்துவிட்டாரா என அவரை பின் தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். இது தொடர்பான மீம்ஸ்களும் கூட வெளியாகின. இன்ஸ்டாகிராமில் எவ்வளவு தேடினாலும் விராட் கோலியின் பக்கம் காட்டப்படவில்லை என ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சிலர் ஒரு படி மேலே சென்று விராட் கோலி மனைவியும் நடிகையுமான அனுஷ்காவை டேக் செய்து விராட் கோலி இன்ஸ்டா பக்கம் ஏன் ஆக்டிவாக இல்லை, அவருக்கு என்ன ஆனது, அக்கவுண்ட்டை டி ஆக்டிவேட் செய்துவிட்டாரா எங்களுக்கு பதில் தேவை என்றெல்லாம் கேட்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் நேற்று செயல்படாமல் இருந்த விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் இன்று ஆக்டிவாக இருக்கிறது. இதனால் நிம்மதி அடைந்துள்ள ரசிகர்கள் இதென்ன புது விளையாட்டு என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு வேளை விராட் கோலியே டி ஆக்டிவேட் செய்து பின்னர் அக்கவுண்ட்டை ஆக்டிவேட் செய்தாரா இல்லை தொழில்நுட்ப பிரச்சினையா என தெரிய வரவில்லை. விராட் கோலி மட்டுமில்லாமல் அவரது சகோதரர் விகாஸ் கோலியின் இன்ஸ்டா பக்கமும் செயல்படாமல் இருந்தது.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான விராட் கோலி 2024ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் இருந்தும் , 2025ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். சரியான் ஃபார்மில் இருக்கும் விராட் கோலி அனைத்து வகையான ஃபார்மேட் கிரிக்கெட் போட்டிகளிலும் 85 சதங்களை அடித்துள்ளார். அவர் 100 சதங்களை எட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications