பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வுகள் தற்போது இந்தியா முழுக்க தலைப்புச் செய்திகள் ஆகிக் கொண்டிருக்கின்றன.
பத்திரிகைகளைத் தாண்டி வெகு ஜன மக்களும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் என்பதால் வெங்காய விலை நாடு முழுக்க பேசப்படும் ஒரு விஷயமாகி இருக்கிறது.
இதற்கு மத்தியில், நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேறு, வெங்காய விலைப் பிரச்னையைக் குறித்து பாராளுமன்றத்தில் பேசும் போது "நான் அதிகம் வெங்காயம் பூண்டு சாப்பிடுவதில்லை, ஆகையால் கவலைப் பட வேண்டாம். நான் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வருகிறேன்" எனப் பேசிவிட்டார்.
ட்ரோல்
அவ்வளவு தான் ஆன்லைனில் ட்ரோல் தீ பற்றிக் கொண்டது. இப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் பேச்சுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கு மத்தியில், ஒரு பாஜக எம்பி, பாராளுமன்றத்தில் இருந்த ஆளுங்கட்சி எதிர் கட்சி என எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறார்.
யார் அவர்
63 வயதாகும் வீரேந்திர சிங் மஸ்த் தான் பாஜகவைச் சேர்ந்த அந்த மக்களவை உறுப்பினர். இவர், உத்திரப் பிரதேசத்தின் பலியா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மக்களவைக்கு வந்திருக்கிறார். இவர் தான் பாரதிய ஜனதா கட்சியின் கிஷான் மோர்ச்சாவின் தலைவர். இவர் தான் நேற்று பாராளுமன்றத்தில் ஒரு ட்ரக் நிறைய நல்ல தரமான வெங்காயத்தை கிலோ 25 ரூபாய்க்கு தருவதாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்.
தன் தொகுதி
மகாராஷ்டிரா & குஜராத் தாண்டி, உத்திரப் பிரதேச மாநிலத்தின், பலியா தொகுதிக்கு உட்பட்ட முஹமதாபாத் தாலுகாவில் நல்ல தரமான வெங்காயம் விளைவிக்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு ட்ரக் நிறைய வெங்காயத்தை கிலோ 25 ரூபாய்க்கு கொடுக்க தயாராக இருப்பதாகச் சொல்லி அனைத்து கட்சி எம்பிக்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறார்.
அழைப்பு
எனவே எதிர் கட்சி மக்களவை உறுப்பினர் தன்னோடு, தன் பலியா தொகுதிக்கு வந்து, ட்ரக் நிறைய வெங்காயத்தை ஒரு கிலோ 25 ரூபாய் என்கிற கணக்கில் வாங்கிச் செல்ல அழைப்பு விடுத்து இருக்கிறார். இதுவரை எந்த எம்பிக்களும், வீரேந்திர சிங்கின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. 25 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயமா...? கூட்டிக் கழித்துப் பார்த்தால் சந்தையில் விற்கும் விலையை விட சுமார் 75 - 85 சதவிகிதம் தள்ளுபடி விலை.
பதிலடி
நேற்று (டிசம்பர் 05, 2019, வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் வெங்காய விலை மற்றும் வெங்காய உற்பத்தி சரிவு குறித்து, காங்கிரஸ் தலைவர் கே சுரேஷ் கேள்வி எழுப்பிய போது, வீரேந்திர சிங் தன் தொகுதியில் விளையும் வெங்காயத்தை தருவதாகச் சொல்லி பதிலடி கொடுத்து இருக்கிறார். அதோடு ஜிடிபி தரவுகள் கிராம புற பொருளாதாரத்தின் அளவீடாகப் பார்க்க முடியாது எனவும் பேசி இருக்கிறார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications