இந்தியர்கள் ஆதிகாலத்தில் இருந்தே வர்த்தகத்தில் சிறந்து விலங்கி வந்தனர், உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்து வெளிநாட்டு ஏற்றுமதி வரையில் கலை பொருட்கள் முதல் உணவு பொருட்கள் வரையில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.
இப்படியிருக்கையில் பிரிட்டிஷ் நாட்டின் இந்தியாவில் வியாபராத்திற்கு வந்த நாளில் இந்தியாவில் கொடிக்கட்டி பறந்த வியாபாரிகளும், வர்த்தகர்களும் ஏராளம். ஆனால் முகலாயர்கள் கோலோச்சிய காலக்கட்டத்தில் இந்தியாவில் மிகப்பெரிய மற்றும் பணக்காரராக இருந்தவர் விர்ஜி வோரா (Virji Vora) என்பவர் தான்.

விர்ஜி வோரா எந்த அளவுக்கு பணக்காரர் என்றால் பிரிட்டிஷ் நாட்டின் கிழக்கிந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் தொழில் துவங்க 1617 முதல் 1670 வரையில் பெரிய அளவில் நிதியுதவி செய்தது விர்ஜி வோரா தான்.
1590ல் பிறந்த விர்ஜி வோரா 1670-ல் மறைந்தார், இந்தியாவின் மிகப்பெரிய மொத்த விற்பனையாளராகவும், மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருந்த விர்ஜி வோரா-வின் சொத்து மதிப்பு அப்போதே 80 லட்சம் ரூபாய். விர்ஜி வோரா இந்தியாவில் இருந்து மிளகு, தங்கம், ஏலக்காய் போன்ற பல பொருட்களை உலக நாடுகளுக்கு அப்போதே ஏற்றுமதி செய்துள்ளார்.
பிரிட்டிஷ் நாட்டவர்களுக்கு 1629 முதல் 1668 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க பெரிய அளவில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் விர்ஜி வோரா. அந்த காலத்தில் எந்த பொருளாக இருந்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் வாங்க கூடிய ஒரே ஆள் விர்ஜி வோரா மட்டும் தான்.
வாங்கிய பொருளை மொத்தமாகவும் சில்லறையாகவும் அதிக லாபத்தில் விற்பனை செய்யும் அளவுக்கு பிஸ்னஸ் கனெக்ஷன்-ஐ அந்த காலத்திலேயே வைத்திருந்தாராம்.
விர்ஜி வோரா-வின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்றால் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் இந்தியாவின் டெக்கான் பகுதியைக் கைப்பற்றும் போரின் போது நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஔரங்கசீப் தனது தூதரை விர்ஜி வோராவிடம் அனுப்பி பணம் கேட்டு உள்ளார்.
இது மட்டும் அல்லாமல் விர்ஜி வோரா முகலாய மன்னர் ஷாஜகானுக்கு நான்கு அரபு குதிரைகளை பரிசாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications