டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டணியில் உருவான விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதிகப்படியான தள்ளுபடியில் டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது.
விஸ்தாரா விமான நிறுவனம் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க் சேவையில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்தச் சிறப்புக் கட்டணம் மூலம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற திட்டம் தீட்டியுள்ளது விஸ்தாரா.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் குறைந்த செலவில் விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியும். வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க, நீங்கள் யாருக்கேனும் சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டால் இது சரியான சான்ஸ்.
விஸ்தாரா ஏர்லைன்ஸ்
விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது எட்டாவது ஆண்டு நிறைவை டிவிட்டரில் கியூட் ஆகப் பதிவிட்டு உள்ளது. விஸ்தாராவுக்கு 8 வயசு ஆச்சு, இது புதிய உணர்வாக உள்ளது! புதிய பாதையை நோக்கி நாங்கள் நகரும் வேளையில், எங்கள் வருடாந்திர விற்பனையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நெட்வொர்க்கில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சிறப்புக் கட்டணங்களை பெறலாம்" என்று விஸ்தாரா விமான நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
உள்நாட்டுப் பயணத் தள்ளுபடி
விஸ்தாரா ஆண்டுவிழா விற்பனையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்திற்கான கட்டணங்களை இப்போது பார்ப்போம். விஸ்தாரா உள்நாட்டு ஒரு வழி பயணத்தில் அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கிய எகனாமி வகுப்பிற்கு 1,899 ரூபாயும், பிரீமியம் எகானமி வகுப்பிற்கு 2,699 ரூபாயும், பிஸ்னஸ் கிளாஸ் வகுப்பிற்கு 6,999 ரூபாய் மட்டுமே என அறிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பயணத் தள்ளுபடி
இதேபோல் விஸ்தாரா நிறுவனத்தின் சர்வதேச விமானப் பயணத்தைப் பொறுத்தவரை, எகானமி வகுப்பிற்கு (டெல்லி-காத்மாண்டு) 13,299 ரூபாயும், பிரீமியம் எகானமிக்கு (டெல்லி-காத்மாண்டு) 16,799 ரூபாயும் பிஸ்னஸ் கிளாஸ் பிரிவுக்கு (டெல்லி-காத்மாண்டு மற்றும் மும்பை-காத்மாண்டு) 43,699 ரூபாயில் ரிட்டர்ன் டிக்கெட் சேவைக்கான அனைத்தையும் உள்ளடக்கிய கட்டணங்கள் தொடங்குகின்றன. இந்தக் கட்டணம் ஒவ்வொரு நாடுகளுக்கும் மாறுபடும்.
23 சதவீத தள்ளுபடி
விஸ்தாரா paid seats மற்றும் excess baggage கட்டணத்திற்குச் சுமார் 23 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இந்தத் தள்ளுபடிகள் அனைத்தும் 23 ஜனவரி 2023 முதல் 30 செப்டம்பர் 2023 வரையிலான இடைப்பட்ட காலப் பயணங்களுக்கும், 12 ஜனவரி 2023 அன்று 23:59 மணிநேரம் வரை முன்பதிவுகளுக்கும் பொருந்தும்.
டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் ப்ரீமியம் விமானச் சேவை அளிக்கும் முயற்சியாக விஸ்தாரா நிறுவனம் 2013 இல் தொடங்கப்பட்டது. தனது சர்வதேச விமானச் சேவைக்காக மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளிலும் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது.
ஏர் இந்தியா உடன் இணைப்பு
டாடா குழுமம் மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியாவை வாங்கிய பின்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடனான நீண்ட காலப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு 29 நவம்பர் 2022 அன்று, டாடா குழுமம் விஸ்தாராவை ஏர் இந்தியாவுடன் இணைப்பதாக அறிவித்தது. இந்த இணைப்பு மார்ச் 2024க்குள் முடிவடையும் என டாடா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications