இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் டாடா குழுமத்தின் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் இந்தியா என 3 நிறுவனங்கள் இருந்தாலும், இண்டிகோ பெரிய அளவிலான ஆதிக்கம் செய்கிறது.
இண்டிகோ நிறுவனத்துடன் போட்டிப்போட டாடா குழுமம் முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் தற்போது டாடா குழுமத்தில் பல முக்கியமான மறுசீரமைப்பு நடவடிக்கை நடத்தி வருகிறது.
இதில் டாடா குழுமத்தின் விமானப் போக்குவரத்து சேவையும் இணைந்துள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமத்தில் தற்போது ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் இந்தியா என 3 விமானச் சேவை நிறுவனங்கள் உள்ளது. இதை இணைத்து ஓரே நிறுவனமாக மாற்ற டாடா குழுமம் தீவிரமாக உள்ளதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஸ்தாரா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனான கூட்டணியில் டாடா உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் இரு நிறுவனங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் புதிதாக ஒரு கூட்டணி நிறுவனத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
25 சதவீத பங்குகள்
இப்புதிய கூட்டணி நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகப்படியாக 25 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்கும். இந்த இணைப்பை முடிக்க ஒரு வருடம் ஆனாலும் இரு நிறுவனத்தில் அதிகப்படியான செலவுகள் குறைத்து, அதிக வர்த்தகம் மற்றும் வருமானத்தைப் பெற முடியும் என டாடா நம்புகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா
இதற்கு முன்பு டாடா குழுமம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா வர்த்தகத்தை இணைக்கும் பேச்சுவார்த்தை துவங்கி இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் பயணிகள் புக்கிங் தளத்தைப் பகிர்ந்து ஒன்றாகப் பயன்படுத்தும் பணிகளும் ஒருப்பக்கம் நடந்து வருகிறது.
லாபம்
3 ஆகப் பிரிந்துக் கிடைக்கும் வர்த்தகத்தை ஒன்றாக இணைக்கும் பட்சத்தில் விமானங்களை எளிதாகத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும், இதேபோல் நிர்வாகச் செலவுகள் குறையும், விமான நிலையத்தில் ஆதிக்கம் அதிகரிக்கும். ஆனால் கேபின் க்ரூ சீருடை, விளம்பரங்களுக்கு அதிகப்படியான செலவாகும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications