டெல்லி: அடுத்தடுத்து பல விமானங்களை ரத்து செய்தது தொடர்பான விரிவான அறிக்கையை வழங்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நேற்று, திங்கட்கிழமை, போதுமான பயணிகள் இல்லாததால், 50க்கும் மேற்பட்ட விமானங்களை விஸ்தாரா நிறுவனம் ரத்து செய்தது. கடந்த வாரத்தில் விஸ்தாரா 100க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ததையும் மினிஸ்ட்ரி ஆப் சிவில் ஏவியேஷன்(MoCA) கவனித்து உள்ளது. இதன் அடிப்படையில் விஸ்தாரா நிறுவனம் தக்க பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சமீபத்தில் ஏ320 விமானங்களில் , பைலட்களுக்கான ஊதியம் புதிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் குறைக்கப்பட்டதால், பல பைலட்கள் விஸ்தாரா நிறுவனத்தில் இருந்து விலகினர். இதுவே விமான நிறுவனத்தில் போதுமான விமானிகள் இல்லாமல் போனதற்கு காரணமாக கருதப்பட்டது. இதனால் ஏற்பட்ட தொடர் விமான ரத்து காரணமாக பல பயணிகள் அவதிக்குட்பட்டனர்.
விஸ்தாராவின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியதாவது, சமீபத்திய நாட்களில் விமான ரத்து மற்றும் தாமதங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பணியாளர்கள் கிடைக்காதது உட்பட பல காரணிகள் காரணமாக இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார். நடப்பு கோடை கால அட்டவணையில் 25.22 சதவீதம் கூடுதல் வாராந்திர விமானங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறோம்.
விஸ்தாரா நிறுவனத்தின் பயணிகளுக்கு கஷ்டம் தராமல் விஷயங்களை எளிதாக்க கடுமையாக உழைத்து வருகிறோம். தற்காலிக தீர்வாக, அதன் விமான நெட்வொர்க்கில் நல்ல இணைப்புகள் இருப்பதை உறுதிசெய்ய விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான விஸ்தாரா விமான நிறுவனம், சில உள்ளூர் வழித்தடங்களில் பரந்து விரிந்த போயிங் 787 ட்ரீம்லைனர் போன்ற பெரிய விமானங்களை அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்துகிறது" என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார். டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனமும் கடந்த மாதம் இதே போன்ற இடையூறுகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், விமானப் பிரச்சனைகளுக்கு பயணிகளிடம் மன்னிப்புக் கேட்ட விஸ்தாரா விமான நிறுவனம், உண்மையில் எத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதை தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வேறு விமானத் ஆப்ஷன்கள் வழங்குவதாகவும் அல்லது பணத்தைத் திருப்பித் தருவதாகவும், சிரமத்திற்கு மன்னிப்புக் கோருவதாகவும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டு உள்ளார்.
"நாங்கள் விஷயங்களைச் சரிசெய்ய முயற்சிக்கிறோம், விரைவில் எங்கள் வழக்கமான எண்ணிக்கையிலான விமானங்களை இயக்கத் தொடங்குவோம்" என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications