நவம்பர் 12-ஆம் தேதி முதல் ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா விமான நிறுவனம் இணையவுள்ளது. இதனால் விஸ்தாரா விமானத்தில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகள் தங்களுடைய லாயல்டி திட்டம் மற்றும் தாங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளுக்கு என்னவாகும் என்பது குறித்த குழப்பத்தில் உள்ளனர். விஸ்தாரா விமான நிறுவனம், நவம்பர் 12-க்குப் பிறகு பயணத்திற்கான முன்பதிவுகளை நிறுத்தவுள்ளது. இதன் விளைவாக, விஸ்தாராவின் அனைத்து விமானங்களும் ஏர் இந்தியாவால் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளப் விஸ்தாராவின் ஃப்ரீக்குவன்ட் பிளையர் திட்டம் நவம்பர் 12-ஆம் தேதி முதல் ஏர் இந்தியாவின் ஃப்ளையிங் ரிட்டர்ன்ஸ் திட்டத்துடன் இணைக்கப்படும் என்று விஸ்தாரா முன்பே கூறியிருந்தது.

ஜனவரி 9-ஆம் தேதி, 2015-ஆம் ஆண்டு அன்று தொடங்கப்பட்ட விஸ்தாரா நிறுவனம், நான்கு பெரிய இந்திய வங்கிகளுடன் கிரெடிட் கார்டுகளையும் வழங்குகிறது. அதில் கிளப் விஸ்தாரா எஸ்பிஐ கார்டு, ஆக்ஸிஸ் விஸ்தாரா பிளாட்டினம், கிளப் விஸ்டாரா ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் கிரெடிட் கார்டு, கிளப் விஸ்தாரா எஸ்பிஐ கார்டு பிரைம், ஆக்ஸிஸ் விஸ்தாரா சிக்னேச்சர், ஆக்ஸிஸ் விஸ்தாரா இன்ஃபினிட், கிளப் விஸ்டாரா இண்டஸ்இண்ட் பேங்க் எக்ஸ்ப்ளோரர் ஆகிய கிரெடிட் கார்டுகள் அடங்கும்.
இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் பயனர்கள் தங்கள் செலவு நடத்தையின் அடிப்படையில் கிளப் விஸ்டாரா பாயிண்ட்களைப் பெறலாம். இந்தப் பாயிண்ட்களைப் பின்னர் விஸ்டாராவுடன் டிக்கெட் வகுப்பை மேம்படுத்த பயன்படுத்தலாம்.
மேலும் இந்த கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பயனர்கள் குறிப்பிட்ட வரம்பு வரை செலவு செய்த பின்னர் இலவச டிக்கெட்களைப் பெறுகின்றனர். அனைத்து விஸ்தாரா கிரெடிட் கார்டுகளுக்கும் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.
இந்த கார்டுகள் மற்றும் சிவி பாய்ண்டுகள் என்னவாகும்?: விஸ்தாரா தங்கள் லாயல்ட்டி வாடிக்கையாளர்களுக்கு இன்னும் விரிவான புதுப்பிப்புகளை எதிர்காலத்தில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளது. தற்போது, லாயல்டி திட்டத்துடன் தொடர்புடைய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஒருங்கிணைப்பு செயல்முறை நடந்து வருகிறது, அதே நேரத்தில் சில ஒழுங்குமுறை அனுமதிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் ஒன்றிணைந்த பிறகு, இந்தியாவிலேயே பெரிய விமான நிறுவனமாக இருப்போம். ஏர் இந்தியாவின் ஃப்ளையிங் ரிட்டர்ன்ஸுடன் கிளப் விஸ்டாராவும் இணையும். ஒருங்கிணைப்பு முடியும் வரை கிளப் விஸ்டாரா திட்டம் தொடர்ந்து இருக்கும். ஒருங்கிணைப்பு செயல்முறை முடிந்ததும், உங்கள் கிளப் விஸ்டாரா கணக்கு ஏர் இந்தியாவின் ஃப்ளையிங் ரிட்டர்ன்ஸுக்கு மாற்றப்படும் என்று ஒரு அறிக்கையில் விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications