முழு நேர விமான சேவை நிறுவனமான விஸ்தாரா அதன் விமானிகளுக்கும், கேபின் ஊழியர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சம்பள அறிவிப்பினை கொடுத்துள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பானது 8% வரையில் இருக்கலாம் என்ற நிலையில், ஏப்ரல் முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் வருகைக்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் விமான துறையும் ஒன்று. பல்வேறு நாடுகளும் தங்களது விமான சேவைகளை நிறுத்தின.
கொரோனா கட்டுப்பாடு
இந்தியாவிலும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், உள்நாட்டு, வெளி நாட்டு விமானங்கள் தடை செய்யப்பட்டன. இதற்கிடையில் விமான நிறுவனங்களும் முடங்கின. அந்த காலகட்டத்தில் பல விமான நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. சம்பள குறைப்பு செய்தன. சம்பளமில்லா விடுமுறை கொடுத்தன.
படிப்படியாக சம்பளம் உயர்வு
இப்படி பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றது. இது மேற்கொண்டு விமான நிறுவனங்களுக்கு சாதகமானதொரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விமான நிறுவனங்களும் படிப்படியாக ஊழியர்களுக்கு குறைத்த சம்பளத்தினையும் படிப்படியாக உயர்த்தி வருகின்றன.
வருவாய் அதிகரிப்பு
கொரோனாவிற்கு பிறகு விமானங்கள் முழுமையான அளவில் செயல்பட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்களின் வருவாய் விகிதமும் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு ஊழியர்களுக்கும் சம்பளத்தினையும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
தேவை அதிகரிப்பு
சொல்லப்போனால் தற்போது விமான பயணத் தேவையானது கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது எனலாம்.
இதற்கிடையில் விமானிகளுக்கான தேவையும் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது எனலாம். இது வளைகுடா விமானங்களில் தேவை அதிகம் இருந்து வரும் நிலையில், பலரும் வேலையினை விட்டு விலகி வருவதாகவும் கூறப்படுகின்றது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 30 விமானிகள் தங்களது பணியினை விட்டு விலகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக விஸ்தாரா நிறுவனம் இப்படி அறிவிப்பினை கொடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருடாந்திர சம்பள உயர்வு நடவடிக்கை
எனினும் இது வருடாந்திர சம்பள உயர்வு நடவடிக்கை தான். மற்றபடி வேறு எந்த சலுகையும் கிடையாது. சில விமானிகள் நீண்டகால நலன் கருதி இப்படி தங்களது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-ந் கூட்டு நிறுவனமான விஸ்தாராவில் தற்போது சுமார் 2500 கேபின் பணியாளர்களும் உள்ளனர்.
இணைப்பு எப்போது?
ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானநிறுவனங்களை இணைக்க இருப்பதாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்(எஸ்ஐஏ) மற்றும் டாடா சன்ஸ் குழுமம் அறிவித்தது. இதன் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1% பங்குகள் ஏர் இந்தியாவுக்கு கிடைக்கும். ஏர் இந்தியா குழுமத்துடன், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர்ஏசியாஇந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என அனைத்தும் இணைக்கும் பணிகளும் 2024, மார்ச் மாதத்தில் முடிந்துவிடும் என்று டாடா சன்ஸ் குழுமம் கடந்த ஆண்டே அறிவித்திருந்தது.


Click it and Unblock the Notifications