அமெரிக்காவில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் ரிமோட் வேலை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் அவர் மீண்டும் அதிபராக பொறுப்பேற்க உள்ளார் .
அவருடைய பிரச்சார குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்களுக்கு எல்லாம் டொனால்ட் டிரம்ப் தற்போது முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் அமெரிக்க அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக அரசு திறன் துறை (Department of Government Efficiency (DOGE)) என்ற ஒரு துறை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த துறைக்கு பிரபல தொழிலதிபர்களான எலான் மஸ்க் மற்றும் இந்திய அமெரிக்கரான விவேக் ராமசாமி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அரசு ஊழியர்கள் நடைமுறையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரப் போகிறோம் என்பது குறித்து விரிவான பார்வையை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது, தேவையற்ற செலவினங்களை குறைப்பது மற்றும் ரிமோட் வேலை அதாவது வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவது ஆகியவையே தங்களின் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்கள் அனைவருமே வாரத்தின் ஐந்து நாட்களும் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணி புரிய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் அலுவலகத்திற்கு வர விரும்பாத பணியாளர்கள் தாங்களாகவே வேலை ராஜினாமா செய்து விடுவார்கள் என இவர்கள் கருதுகிறார்கள். இதன் மூலம் ஊழியர்களுக்காக அரசு செய்யும் செலவினமும் குறையும் என இவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு ஊழியர்களின் எண்ணிக்கையும் இவர்கள் குறைக்க திட்டமிட்டுள்ளனர். தேவையற்ற செலவினங்களை குறைப்பதற்காக ஊழியர்களுக்கு அரசு வழங்கும் சில சலுகைகளை குறைப்பதற்கும் இவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
இது மட்டுமின்றி அரசு நிர்வாகத்தில் அதிகாரிகள் அதிக அளவில் இருந்தால் புதுமைகள் எதுவும் ஏற்படாது ,செலவு தான் அதிகரிக்கும் என்பதே இவ்விருவரின் கருத்தாக இருக்கிறதாம். மேலும் அமெரிக்க திறன் துறையில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன அதனால் என்ன மாற்றங்கள் உண்டாகி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு வாரமும் அமெரிக்க மக்களுக்கு நேரடி ஒளிபரப்புகள் மூலம் தெரிவிப்போம் என விவேக் ராமசாமி கூறியுள்ளார். அரசு பணிகள் வெளிப்படையானதாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஆதரவு இல்லாத விதிகளை நீக்கவும் இவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான புதிய சட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும் என இவர்கள் கருதுகிறார்களாம். இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இவ்விருவரும் 2026 ஜூலை 4ஆம் தேதியை கடைசி தேதியாக நிர்ணயம் செய்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications