அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி சார்பாக அதிபர் பதவிக்கு போட்டிப்போட்ட முக்கியமான நபர் விவேக் ராமசாமி, தமிழ்நாடு மற்றும் கேரளா பின்புலத்தை கொண்டுள்ள இவர் அதிபராக வேண்டும் என பல கோடி இந்தியர்கள் அப்போது ஆசைப்பட்டனர். ஆனால் இறுதி போட்டியில் விவேக் ராமசாமி விலகி டொனால்டு டிரம்ப்-க்கு வழிவிட்டார்.
இந்த நிலையில் விவேக் ராமசாமி துணை அதிபராக போட்டிப்போடுவார் என பேசப்பட்டது, ஆனால் அதுவும் சில நாட்களிலேயே ஜேடி வேன்ஸ்-க்கு கொடுக்கப்பட்டது. தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி வெற்றிப்பெற்ற நிலையில் விவேக் ராமசாமி-க்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என பேச்சு நிலவியது ஆனால் டிரம்ப் அவருக்கு நேரடி அரசு பதவி கொடுக்காமல் DOGE அமைப்பின் பொறுப்பை கொடுத்தார்.

அமெரிக்க அரசின் நிர்வாகத்தையும் திறன்பட மேம்படுத்தும் முக்கியமான அமைப்பாக DOGE செயல்படுகிறது, இந்த அமைப்பு அரசின் செலவுகளை குறைக்கும் முக்கிய அமைப்பாக இருக்கும் என டிரம்ப் அறிவித்தார். இந்த அமைப்பு விவேக் ராமசாமி மற்றும் எலான் மஸ்க் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதற்கும் வேட்டு வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
எலான் மஸ்க் உடன் இணைந்து அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE அமைப்பின் இணைத் தலைவராக இருக்கும் விவேக் ராமசாமி, அந்தப் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஓஹியோ கவர்னருக்கான பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கான அவரது திட்டங்களே காரணம் என்று நம்பப்படுகிறது.
இதன் மூலம் டோஜ் அமைப்பின் தலைவராக எலான் மஸ்க் மட்டும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.DOGE இலிருந்து அவர் வெளியேறுவது குறித்து, CBS செய்தி பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இதுநாள் வரையில் டோஜ் அமைப்பின் அனைத்து கூட்டங்களிலும் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் கலந்துக்கொண்டு உள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications