விவோ நிறுவனத்தின் பண மோசடி இந்தியாவையே உலுக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும், அதை விட முக்கியமாக இந்தியாவில் சீனர்கள் இருவருக்குப் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விவோ நிறுவனத்தில் உயர் பதவி கொடுத்துள்ளது பேரதிர்ச்சியாக உள்ளது.
22 மாநிலங்களில் விவோ நிறுவனம் மற்றும் அதன் 23 கூட்டணி நிறுவனங்கள், அலுவலகங்கள் என மொத்தம் 44 இடங்களில் அமலாக்க துறை சோதனை செய்துள்ளது.
இந்தத் சோதனையில் ரொக்க பணம், டெப்பாசிட், தங்கம் உட்படப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்க துறை வட்டாரங்கள் கூறுகிறது.
விவோ
விவோ மற்றும் அதன் 23 கூட்டணி நிறுவனங்கள், அலுவலகங்கள், வளாகங்களில் அமலாக்க இயக்குனரகம் (ED) புதன்கிழமை முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனையின் போது Vivo உடன் தொடர்புடைய நிறுவனங்களில் ஒன்றின் இயக்குநர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
சீன இயக்குநர்கள்
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் அடிப்படையில், விவோவுடன் தொடர்புடைய ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சோலன் என்னும் நிறுவனத்தின் சீன இயக்குநர்கள் இருவர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
போலி ஆவணங்கள்
சோலன் என்னும் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவரும் சீன நாட்டவர்கள், போலி ஆவணங்கள் மூலம் இந்திய நிறுவனங்களில் இயக்குநர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் எனப் பிஸ்னஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.65,000 கோடி பணமோசடி நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
62,476 கோடி ரூபாய் மோசடி
விவோ இந்திய பிரிவு அதன் மொத்த Turnover-ல் கிட்டத்தட்ட 50 சதவீத பணம் அதாவது 62,476 கோடி ரூபாயை, இந்தியாவில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகத் திட்டமிட்டு சீனா-வுக்கு அனுப்பியுள்ளது என அமலாக்கத் துறை வியாழக்கிழமை (இன்று) கூறியுள்ளது.
சோதனை பறிமுதல்
விவோ நிறுவனத்திற்குச் சொந்தமான 44 இடங்களில் செய்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான 119 வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.465 கோடி மதிப்புள்ள பணம், ரூ.73 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி
சியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 5,551.27 கோடி ரூபாய் தொகையை அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) விதிகளின் கீழ், அந்நிறுவனம் செய்த சட்டவிரோத வெளிப் பரிமாற்றங்களுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் இருந்து ஏப்ரல் மாதம் அமலாக்க துறை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications