அமலாக்கத்துறை, சீன நிறுவனமான வீவோவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை "இறக்குமதி பேரவை கீழ்" வீவோ இந்தியா நிறுவனம் ஹாங்காங்கில் உள்ள ரூம் 901-லிருந்து கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது, உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
"விவோ சீனா நிறுவனம், வீவோ இந்தியா மற்றும் அதன் 23 எஸ்டிசி-க்கள் (மாநில விநியோக நிறுவனங்கள்) மூலம் இந்தியாவில் உள்ள வீவோ மொபைல் விற்பனையின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி, மோனோபோலியாக ஆதிக்கம் செலுத்தியது," என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியதுள்ளது.

அமலாக்கத் துறையின் அறிக்கையில் கூறியுள்ளதன் படி, வீவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் 70,837 கோடி ரூபாய் நிதியை இந்தியாவிற்கு வெளியே அனுப்பியுள்ளது. இந்த நிதி வெளியேற்றத்திற்கு வீவோ தனது நிதியியல் அறிக்கையில் "சரக்குகளின் இறக்குமதிக்கான கட்டணங்கள்" என்ற பெயரில் குறிப்பிட்டு உள்ளது. இதை தான் அமலாக்கத்துறை முக்கிய குற்றச் செயலாக குறிப்பிடுகிறது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வீவோ இந்தியா நிறுவனம் ஹாங்காங், சமோவா மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் அமைந்துள்ள நிறுவனங்களிலிருந்து இருந்ததாகவும், இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் வீவோ சீனா நிர்வாகம் கட்டுப்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்திய அரசுக்கும், அமலாக்கத்துறைக்கும் தெரியக்கூடாது என்பதற்காக வீவோ இந்தியா நிறுவனம் வீவோ சீனா உடனான உறவை மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. விவோ நிறுவனம், தனது சீன நிர்வாகத்திலிருந்து தனித்துச் செயல்படுவதாகக் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்திய விநியோக சந்தையின் மொத்த கட்டுப்பாடும் சீனாவின் கையில் தான் உள்ளது, இது வர்த்தக விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
வீவோ சீனா, ஹாங்காங்கில் உள்ள மல்டி அகார்ட் லிமிடெட் போன்ற வெளிநாடுகளில் சிறப்பு நோக்க நிறுவனங்களை நிறுவியதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. வீவோ மொபைல் இந்தியா, மல்டி அகார்ட் லிமிடெட்டின் துணை நிறுவனமாக இணைக்கப்பட்டது, அதே சமயம் வீவோ சீனா, மல்டி அகார்டின் பங்குதாரராக இருந்த லக்கி கிரெஸ்ட் என்ற மற்றொரு ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பங்குதாரராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சிக்கலான அமைப்பு வீவோ இந்தியாவின் மீதான வீவோ சீனாவின் கட்டுப்பாட்டை நிரூபிக்கிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications