இந்திய ஸ்மார்ட்போன் தொழிற்சாலையை விற்கும் சீனாவின் VIVO.. வாங்குவது யார் தெரியுமா..?

நொய்டா: சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ, இந்தியாவில் தங்களுக்கு சொந்தமான உற்பத்தி ஆலையை மைக்ரோமேக்ஸின் தாய் நிறுவனத்திடம் ஒப்படைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bhagwati Products இது மைக்ரோமேக்ஸின் தாய் நிறுவனம். விரைவில் விவோ நிறுவனத்தின் செல்போன் ஆலையின் கட்டுப்பாடு இந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் படி, விவோ நிறுவனம் இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது.

இந்திய ஸ்மார்ட்போன் தொழிற்சாலையை விற்கும் சீனாவின் VIVO.. வாங்குவது யார் தெரியுமா..?

2023ஆம் நிதி ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் 30,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது. அதுமட்டுமின்றி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமாக விவோ இருக்கிறது.

சீன நிறுவனமாக இருப்பது மற்றும் அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இணங்க முடியாத சூழல் ஆகியவை காரணமாக இந்நிறுவனம் புதிய முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே ஓப்போ மற்றும் விவோ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் செயல்பாடுகளை திறம்பட நடத்துவதற்கு என ஒரு நிறுவனத்தை தேடி வந்தன. இந்நிலையில் மைக்ரோமேக்ஸின் தாய் நிறுவனத்துடன் விவோ கை கோர்க்க உள்ளது.

நொய்டா பகுதியில் விவோவுக்கு சொந்தமாக இரண்டு இடங்களில் ஆலைகள் உள்ளன. இதில் முதல்முறையாக நிறுவிய ஆலையை தான் தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாகவும் இது 14 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்பதும் தெரிய வந்துள்ளது. மற்றொரு விவோ ஆலையானது 169 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்றும் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் இது அமைக்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் ஸ்மார்ட் ஃபோன்களுக்கான புரொடக்சன் லிங்க்டு இன்செண்டிவ் திட்டத்தின்(production-linked incentive ) கீழ் சலுகைகளை பெறுவதற்காகவே, விவோ இந்த வியூகத்தை எடுத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, பாக்வதி நிறுவனம் மத்திய அரசு வழங்கக்கூடிய இந்த ஊக்கத்தொகையை விவோவிடம் வழங்கும் என தெரிகிறது. எனவே இந்தியாவில் விவோ மற்றும் பாக்வதி நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கு அரசின் ஒப்புதலை பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்பி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வருவதால் அரசும் இதற்கு ஒப்புதல் வழங்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிற்கு தேவையான பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது என்பது தான் மேக் இன் இந்தியா திட்டம். வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஆலைகளின் நிறுவி பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்குகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+