டெல்லி: சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன விவோ இந்தியாவின் அதன் உற்பத்தியினை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்காக நொய்டாவில் இந்த ஆண்டு 169 ஏக்கரில் அதன் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த புதிய ஆலை 2024ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரலாம் என இந்த நிறுவனத்தின் பிராண்ட் ஸ்ட்ராடஜி தலைவர் யோகேந்திர ஸ்ரீராமுலா தெரிவித்துள்ளார்.

விவோவின் இந்த முதலீடானது அதன் 7500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு அறிவிப்பின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகின்றது. விவோவின் இந்த விரிவாக்கம் என்பது அதன் உற்பத்தியை இருமடங்காக அதிகரிக்க உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு 120 மில்லியன் யூனிட்கள் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராக விவோ உருவெடுக்கும்.
முதல் கட்டத்தில் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக நாங்கள் கூறினோம். இந்த திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. ஏற்கனவே 2400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். மீதமுள்ள 1100 கோடி ரூபாய் இந்த ஆண்டு முழுவதும் முதலீடு செய்யப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எங்களின் புதிய உற்பத்தியானது தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விவோ நடப்பு ஆண்டில் 1 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை பெரியளவில் ஏற்றுமதி செய்யும் என ஸ்ரீராமுலா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் சில சிக்கல்களுக்கு மத்தியில் ஏற்றுமதியானது சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்திற்கு அனுப்பிய போது சற்றே தடைப்பட்டது. ஆனால் இது இந்த ஆண்டு ஏற்றுமதியானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் எங்களிடம் உள்ளது. நாங்கள் ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கிறோம். பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றோம். தேவையான பகுதிகளுக்கு எங்களால் ஏற்றுமதியும் செய்ய முடியும்.
விவோவின் அனைத்து ஸ்மார்ட்போன்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டாலும், உள்நாட்டில் இன்னும் பிராண்டுகளை அதிகரிக்க நினைக்கிறது. ஸ்மார்ட்போன் அசெம்பிளையும் உள்நாட்டில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

எனினும் விவோவின் 95% பேட்டரிகளின் உதிரி பாகங்கள், 70% சார்ஜ்கள் மற்றும் இயர்போன்கள் உள்நாட்டில் இருந்தே பெறப்படுகின்றன. இதனையடுத்து நாங்கள் தற்போது டிஸ்பிளேவில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றோம். இதற்காக சில ஒப்பந்தங்களையும் செய்துள்ளோம்.
இது எல்லாவற்றுக்கு மேலாக விவோ நிறுவனம் தொடர்ந்து ஆப் லைன் விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றோம். இதற்காக 70,000 டச் பாயிண்டுகள் மற்றும் 260 பிரத்யேக கடைகள் உள்ளன. சில்லறை விற்பனையில் வரும் ஒரு பகுதி தற்போது ஆன்லைனில் இருந்தும் வந்து கொண்டுள்ளது.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications