சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ இந்தியாவில் வேகமாகத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கியமான இடத்தையும் பிடித்துள்ளது.
ஆனால் இதேவேளையில் சீன ஸ்மார்ட்போன் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு மோசடிகள், பணச் சலவைகள் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சியோமி, ஹூவாய் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது வீவோ வலையில் சிக்கியுள்ளது.
அமலாக்க இயக்குனரகம் (ED) பணமோசடி தொடர்பாக விவோ நிறுவனத்தின் அலுவலகம், தொழிற்சாலை, நிர்வாகத் தலைவர்கள் வீடு உட்படப் பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
Vivo நிறுவனம்
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமலாக்க இயக்குனரகம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை மட்டும் சுமார் 22 மாநிலங்களில் Vivo நிறுவனத்தின் வளாகங்கள் மற்றும் தொடர்புடைய 44 இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் பல விஷயங்கள் வெளியாகியுள்ளது.
ராஜதந்திரி பின் லுவோ
இதில் முக்கியமாக விவோ நிறுவனத்தின் பணச் சலவை, பண மோசடி-யின் கிங் பின் அதாவது ராஜதந்திரி பின் லுவோ (Bin Luo) என்பவர் தான் எனத் தெரிய வந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் அவர் இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமலாக்கத் துறை சோதனை
சீன நிறுவனமான விவோ இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் சூத்திரதாரியாக இருந்தது பின் லுவோ என்ற நபர் தான் என்று அமலாக்க துறையின் சோதனையில் தெரிய வந்துள்ளது.
23 நிறுவனங்களில் இயக்குநர் பதவி
இது மட்டும் அல்லாமல் இந்தியாவில் விவோ போன்கள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 23 நிறுவனங்களில் பொதுவான இயக்குநராக உள்ளார் பின் லுவோ. மேலும் பின் லுவோ பண மோசடி அறிந்துகொண்டு இந்தியாவை விட்டு நீண்ட காலத்திற்கு முன்பே தப்பிச் சென்று, அதன் பின் இந்தியா திரும்பவில்லை என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ராஜதந்திரி பின் லுவோ பெயர்
Vivo மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ளதால், அமலாக்க இயக்குநரகம் (ED) சோதனை நடத்திய பிறகு ராஜதந்திரி பின் லுவோ பெயர் வெளியாகியுள்ளது. அமலாக்கத் துறையின் சோதனையின் போது விவோ நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் காணாமல் போனதும் தெரிய வந்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications