2022 இன் ஆரம்பித்த ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவிற்கு வராத நிலையில், சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார்.
இதனால் ரஷ்யா-உக்ரைன் - உக்ரைன் ஆதாரவு நாடுகள் மத்தியில் பதற்றமாக சூழ்நிலை நிலவுகிறது. மேலும் ரஷ்யா-உக்ரைன் எல்லைகளில் தொடர்ந்து ராணுவ கட்டமைப்புகளை ரஷ்யா அதிகரித்து வரும் வேளையில், சில நாட்களுக்கு முன் அமெரிக்கா 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் அவருடைய காதலி மற்றும் குழந்தைகளுடன் மிகப் பிரமாண்டமான மாளிகையில் ரகசியமாக வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிபரின் காதலி யார்!
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் காதலி மற்றும் அவரின் வாழ்க்கைக் குறித்து தடைசெய்யப்பட்ட ரஷ்ய எதிர்கட்சி இணையதளமான தி ப்ரஜெக்ட் ரஷ்யப் புலனாய்வு செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அலினா கபேவா (39) என்ற பெண்ணுடன் வசித்து வருவதாகவும், அந்தப் பெண் ஜிம்னாஸ்ட்டிக் மற்றும் ஒலிம்பிக் ரிதமிக் சாம்பியன் என்றும் நீண்ட காலமாகவே அவருக்கும் புதின்-க்குமிடையே காதல் இருப்பதாகச் தகவல்கலை வெளியிட்டுள்ளது.
காதலிக்காக மாளிகையைக் கட்டிய புதின்!
தன் பல ஆண்டு காதலிக்காக ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவில் உள்ள வால்டாய் ஏரி அருகில், ஓர் இடத்தை வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடந்து அந்த இடத்தில் அவர் 2020 ஆண்டு ஒரு பெரிய மாளிகையை கட்டத் தொடங்கியதாகவும், அக்கட்டுமானப் பணி 2022 இல் முடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
13,000 சதுர அடியில் மாளிகை
இந்த மாளிகை கிட்டத்தட்ட 13,000 சதுர அடியில், ரஷ்ய டச்சா பாணியில் முற்றிலும் மரத்தால் கட்டப்பட்டிருக்கிறது எனவும், அதில் புதினின் காதலி அலினா கபாவே அவரின் குழந்தைகள், மற்றும் கபீவாவின் உறவினர்கள் சிலரும் தங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மாளிகையின் மதிப்பு!
சும்மா சாதரணமாக இல்லை புதின் அவர்கள் காதலிக்காக ஏகபோகமாகவே செலவு செய்துள்ளார். அவர் காதலிக்காக கட்டிய மாளிகையின் மதிப்பு சுமார் 120 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் முடிசூடா ராணி!
தன் காதலி உடனான உறவை அதிபர் புதின் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், அவர் ரஷ்யாவின் முடிசூடா ராணி என்றே அழைக்கப்படுகிறார். 2000 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே இருவரும் காதலித்து வருவதாகவும், புதினின் குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு அலினா தாய் எனவும் புலனாய்வுத் துறை அறிக்கைகள் கூறுகின்றன.
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின்!
ரஷ்ய அதிபரான விளாடிமர் புதின்-க்கு 71 வயதாகிறது. இவர் 1999 இல் அரசியலில் நுழைந்து அப்போது அதிபராக இருந்த போரிஸ் எல்ட்சினின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்துள்ளார். போரிஸ் எல்ட்சின் அதிபர் பதவியை ராஜினாமா செய்தவுடன் புடின் செயல் அதிபராக பொறுப்பேற்றார்.
அதன்பின் 2008 ஆம் ஆண்டு ரஷ்யாவின் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அதனையடுத்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று ரஷ்யாவின் அதிபராக உள்ளார்.


Click it and Unblock the Notifications