உக்ரைன் நாட்டு போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய ஆதரவாளர்களும் புதின் அழைத்துள்ள பேச்சுவார்த்தைக்கு வர மறுத்துவிட்டனர்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் பிப்ரவரி 24, 2022 துவங்கி இன்று வரையில் நடந்து வருகிறது.
இரு தரப்பும் கடைசி மூச்சு வரையில் போரிட தயாராக இருக்கும் நிலையிலும், மேற்கத்திய நாடுகள் அதிகளவிலான நிதியுதவி, ஆயுத உதவிகளை அளித்து வரும் வேளையில் ரஷ்யாவின் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகக் பெரிய மோதலாக விளங்குகிறது. இதேபோல் 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய மோதலையும் இந்த போர் தூண்டியுள்ளது.
ரஷ்ய ராணுவம்
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போரில் ரஷ்யா தனது அனைத்து நோக்கங்களையும் அடையும் வரை போராடுவதாகக் கூறுகிறது, அதே நேரத்தில் ஒவ்வொரு ரஷ்ய ராணுவ வீரரும் உக்ரைன் நாட்டில் இருந்து அனைத்து பகுதிகளிலிருந்தும் வெளியேற்றப்படும் வரை ஓயமாட்டேன் என்று உக்ரைன் அரசு கூறுகிறது. இதில் உக்ரைன் அரசு 2014 இல் ரஷ்யா-வுடன் இணைந்த கிரிமியா சேர்த்து கூறுகிறது குறிப்பிடத்தக்கது.
போர்
இப்படி அனைத்து விதத்திலும் இரு நாடுகளும் எதிருக்கு எதிராக நிற்கும் நிலையில், ரஷ்யா இந்த போரில் சம்பந்தப்பட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
விளாடிமிர் புடின்
ஆனால் அது அவர்களைப் பொறுத்தது - நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பவர்கள் அல்ல, அவர்கள் தான் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியான ரோசியா 1 சேனல் பேட்டியில் கூறினார்.
ரியான திசை
மேலும் புட்டின் இந்த பேட்டியில் உக்ரைனில் ரஷ்யா "சரியான திசையில்" செயல்படுவதாகவும், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் தான் ரஷ்யாவை பிளவுபடுத்த முயற்சிக்கின்றன.
மக்கள் நலன்
நாங்கள் சரியான திசையில் செயல்படுகிறோம் என்று நான் நம்புகிறேன், நாங்கள் எங்கள் தேசிய நலன்கள், எங்கள் குடிமக்கள், எங்கள் மக்கள் நலன்களைப் பாதுகாக்கிறோம் என்றும் புடின் கூறினார்.


Click it and Unblock the Notifications