ரஷ்யா உக்ரைன் பிரச்சனையானது பல மாதங்களை தாண்டியும் இன்று வரையில் தொடர்ந்து வருகின்றது. இது இன்னும் நீடிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது.
இதற்கிடையில் உலகம் முழுக்க கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டிருந்த நிலையில், தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது.
இப்படி ஒரு நிலைக்கு மத்தியில் விலையினை கட்டுக்குள் வைக்க, ஓபெக் நாடுகள் ஏற்கனவே உற்பத்தியினை குறைத்துள்ளன.
மேற்கத்திய நாடுகளின் சூட்சுமம்
ரஷ்யா உக்ரைன் தாக்குதல் மத்தியில் ரஷ்யாவினை பின் வாங்க வைக்க மேற்கத்திய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே ரஷ்யாவின் வசம் எண்ணெய் வாங்குவதை தடை செய்துள்ளன. சில நாடுகள் படிப்படியாக நிறுத்தவும் திட்டமிட்டு வருகின்றன. மொத்தத்தில் எப்படியேனும் ரஷ்யாவினை முடக்கினால் போதும் என நினைக்கின்றன.
எண்ணெய் விலைக்கு உச்ச வரம்பு
இதற்கெல்லாம் அசராத புடின், மேற்கத்திய நாடுகளின் தடையை சுக்கு நூறாக உடைத்து வருகின்றார். ஒரு புறம் இப்படி எனில் மறுபுறம் சளைக்காமல், மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்த தடையை உடைத்து வருகின்றன. இப்படி ஒரு நிலைக்கு மத்தியில் தான் ஜி 7 நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய்க்கு விலை உச்ச வரம்பினை நிர்ணயித்தன.
ரஷ்ய எண்ணெயை பயன்படுத்த திட்டம்
ஜி 7 நாடுகளுடன் இணைந்து ஆஸ்திரேலியாவும் இந்த தடையில் இணைந்தது. இந்த உச்ச விலை வரம்பானது அமலுக்கு வந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையானது சற்றே அதிகரித்தது. இந்த விலை உச்ச வரம்பால் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த முடியும் என்பது ஒரு புறம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாக இருந்தாலும், மறுபுறம் ரஷ்யாவின் எண்ணெயை வேண்டாம் என கூறிய நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டன.
ரஷ்யாவை முடக்க திட்டம்
ரஷ்யாவின் மீதான இந்த அறிவிப்புக்கு ரஷ்யாவை முடக்குவது ஒரு காரணமாக இருந்தாலும், மறுபுறம் ரஷ்யாவின் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. இதன் மூலம் ரஷ்யாவின் முக்கிய வருவாய் ஆதாரமான எண்ணெய்யை தங்கள் கட்டுக்குள் வைக்க முடியும். ரஷ்யா தங்கள் மகுடிக்கு ஆடும் என திட்டமிடுகின்றன.
அசராத ரஷ்யா
ஆனால் நாங்கள் எந்த மகுடிக்கு அசர மாட்டோம் எனும் விதமாக ரஷ்ய அதிபர் புடின் அடுத்தடுத்த அறிவிப்புகளை கொடுத்து வருகின்றார். கடந்த மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முதன் முதலில் தடையை முன்மொழிந்தபோது, இது ரஷ்யாவின் எண்ணெய் பணப்புழக்கத்திற்கு பெரும் அடியாக இருக்கும் என்ற அனுமானம் இருந்தது. ஆனால் ரஷ்யாவோ அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. ஒவ்வொரு தடையையும் தனக்கு படிக்கல்லாக மாற்றிக் கொண்டது.
ரஷ்யாவை எவ்வாறு பாதிக்கிறது?
ரஷ்யாவின் மீதான கட்டுப்பாடுகள் ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாய் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இவை அனைத்தையும் மீறி, இந்த ஆண்டு மாஸ்கோவின் நடப்புக் கணக்கு உபரி 200 பில்லியனுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜி7 நாடுகளின் தடையால் கச்சா எண்ணெய் வீழ்ச்சியடைந்து, விலை உச்சவரம்பு நீடித்தால், அது ரஷ்யாவுக்கு இன்னும் சாதகமாக இருக்கலாம்.
இந்தியாவின் நிலை என்ன?
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பிறகு ரஷ்யா மீது அமெரிக்கா தலைமையிலான பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், இந்தியா அதைத் கருத்தில் கொள்ளாமல் மாஸ்கோவுடனான தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகின்றது. எனினும் விலை உச்ச வரம்பு என்பது இந்த வர்த்தக உறவில் தாக்கத்தினை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன?
ரஷ்யாவின் மீது தொடர்ந்து அழுத்தத்தினை கொடுக்கும்போது, ரஷ்யா அதன் உற்பத்தியினை குறைக்கலாம். மேற்கத்திய நாடுகளின் முட்டாள்தனமான விலை உச்ச வரம்பால் அவற்றிற்கு விற்பனை செய்வதையே கூட நிறுத்தலாம். புடினும் வாய்ப்பிருந்தால் உற்பத்தியினை குறைப்போம் என்றும் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தது நினைவுக் கூறத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications