வந்தனா லுத்ராவின் அயராத உழைப்பால் பெரியதொரு சாதனையை படைத்தார். பியூட்டி மற்றும் வெல்னஸ் துறையில் தனது தொழில் பயணத்தை தொடங்கிய வந்தனா லுத்ரா ரூ.20,000இல் முதல் விஎல்சிசி வெல்னெஸ் மையத்தைத் தொடங்கினார். இப்போது அவர் ரூ.2225 கோடி ரூபாயில் கொழிக்கிறார்.
விஎல்சிசி நிறுவனத்தை மல்ட்டி மில்லியன் தொழிலாக வந்தனா உயர்த்தி விட்டார். டெல்லியில் கடந்த 1959 ஆம் ஆண்டு பிறந்தார் வந்தனா லுத்ரா. அவரது தந்தை ஆயுர்வேத மருத்துவர். தாய் மெக்கானிக்கல் இன்ஜினியர்.

டெல்லியில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக்கில் வந்தனா படித்தார். காஸ்மடாலஜி மற்றும் நியூட்ரிஷன் குறித்து படிக்க அவர் ஜெர்மனிக்கு சென்றார். அங்கு அவர் வெல்னெஸ் பிராண்டை தொடங்குவதற்கு முடிவு செய்தார்.
தனக்கு வாடிக்கையாளர்களை ஆய்வு செய்யும் திறன் இயற்கையிலேயே இருக்கிறது என்றும் அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வெல்னஸ், ஹெல்த், பியூட்டி துறையில் உள்ள தேவைகளை அறிந்து கொள்ள முடியும் என உணர்ந்திருந்தார். ஒருங்கிணைந்த நலம், பியூட்டியை மையமாக வைத்து ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்று வந்தனா திட்டமிட்டார்.
1989இல் அவர் முகேஷ் லுத்ராவை திருமணம் செய்து கொண்டார். ரூ20,000 முதலீட்டில் வந்தனாவும் அவரது கணவரும் டெல்லியில் விஎல்சிசி ஹெல்த் சென்டரை தொடங்கி வேலை செய்தனர். அவர் நாடுமுழுவதும் இளைஞர்களிடம் பேசி விஎல்சிசி பிராண்டை அறிமுகப்படுத்தினார்.
உணவு மாற்றங்கள், உடற்பயிற்சிகளை வைத்து உடல் எடை நிர்வாகத்தை அவர் வலியுறுத்தினார். 1989இல் விஎல்சிசி உருவானது. உணவு மாற்றங்கள், உடற்பயிற்சிகள், சருமம் மற்றும் முடிக்கான சிகிச்சைகள் மூலம் மக்களை அவர் கவர்ந்திழுத்தார்.
நிறுவனத்தின் வெற்றிக்கு வந்தனா கடுமையாக உழைத்தார். ஒரு சில வருடங்களில் தனக்கென்று குறிப்பட்ட வாடிக்கையாளர்களை அவர் பெற்றார்.
அழகு மற்றும் உடல் எடை குறைப்புக்கான கோர்ஸ்களை வந்தனா அறிமுகப்படுத்தினார். பின்னர் விஎல்சிசி காஸ்மெடிக்ஸ் மற்றும் ஹெல்த்கேர் தயாரிப்புகளை உற்பத்தி செய்தது. இன்றைக்கு விஎல்சிசி பிராண்டு ஸ்கின்கேர் மற்றும பியூட்டியில் இந்திய குடும்பங்களில் ஒரு அங்கமாக விளங்குகிறது.

139 நகரங்களிலும் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்காவில் 12 நாடுகளிலும் இந்த பிராண்டு செயல்படுகிறது.
பியூட்டி மற்றும் வெல்னஸ் செக்டார்களுக்கு அவர் தலைமை பொறுப்பை வகிக்கிறார். இந்தியாவில் சுயமாக உருவான பெண் தொழிலதிபர்களில் மிகவும் சாதனை புரிந்த நபராக இருக்கிறார் வந்தனா.
நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையின் ஒரு பகுதியாக ஆரோக்கியத்தையும் அழகையும் இணைத்து ஒரு முன்னுதாரணமாக அவர் மாற்றியுள்ளார். விஎல்சிசி பிராண்டுக்காக அவர் புதிதுபுதிதாக தயாரிப்புகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்.
ஒரு தொழிலதிபராக மட்டுமல்லாமல் பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர் பாடுபடுகிறார். அவரது நிறுவனத்தில் 3000 பேர் வேலை பார்க்கின்றனர். அதில் 70 சதவீதம் பேர் பெண்கள்.
வந்தனாவின் சாதனையைப் பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
போர்ப்ஸின் 50 சக்தி வாய்ந்த பெண் தொழில்அதிபர்கள் பட்டியலில் வந்தனா லுத்ராவும் இடம் பெற்றுள்ளார். பார்ச்சூன் மேகஸீன் தனது ஆண்டு பட்டியலில் 50 மிக சக்திவாய்ந்த பெண்கள் வரிசையில் வந்தனாவையும் சேர்த்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications