பெங்களூரு: மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு தரக்கூடிய பிசினஸ் ஐடியாக்கள் பெரும் வெற்றி பெறுகின்றன. அப்படி இருசக்கர வாகனங்களுக்கான சர்வீஸ் மையங்களை தொடங்கிய இரண்டு நண்பர்கள் குறுகிய காலத்திலேயே தொழிலில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளனர்.
பெங்களூருவை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் லோகேஷ் ஆகிய இருவரும் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அந்த சமயத்தில் இவர்களுக்கு இரு சக்கர வாகன பயன்பாட்டாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிய வந்தது .

பொதுவாக இருசக்கர வாகனம் பயன்படுத்துபவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் சென்று வாகனத்தை சர்வீஸ் செய்வது என்பது சவால் நிறைந்ததாக இருக்கிறது. முதல் காரணம் இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் சர்வீஸ் செய்வதற்கான கட்டணம் அதிகம்.
இரண்டாவது காரணம் அவர்கள் எளிதில் சென்று வரக்கூடிய தொலைவில் இந்த சர்வீஸ் மையங்கள் இருப்பதில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு நண்பர்களும் இணைந்து விஓசி ஆட்டோமோட்டிவ் (VOC Automotive) என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
வெங்கடேஷ் அவர்களின் தந்தை ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர். லோகேஷ் அவர்களின் தந்தை ஒரு விவசாயி.இப்படி ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர்கள் மேற்படிப்புக்காக பெங்களூருக்கு வந்த போது சந்தித்து நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் யமஹா மோட்டார், ஹோண்டா மோட்டார் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளனர் .அப்போதுதான் இவர்களுக்கு இருசக்கர வாகனங்களுக்கான நம்பகத்தன்மையான சர்வீஸ் மையங்களை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
2019 ஆம் ஆண்டு இருவரும் தங்களது வேலையை கைவிட்டு விஓசி ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தை தொடங்கினர். அனைத்து பிராண்டுகளின் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான சர்வீஸ் மற்றும் ரிப்பேர் சேவைகளை செய்து தரக்கூடிய ஒரு நிறுவனம் இது. பிராண்டுகளின் சர்வீஸுடன் ஒப்பிடுகையில் இவர்கள் 30 சதவீதம் குறைவான கட்டணத்தில் சர்வீஸ் செய்து தந்தனர். அது மட்டும் இல்லாமல் தரமான சேவைகளையும் , கியாரண்டிகளையும் வழங்கினர். இதன் காரணமாக இவர்களால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
ஒரு செயலியை உருவாக்கி வாகனங்களின் சர்வீஸ் காலம் உள்ளிட்டவற்றை டிராக் செய்வதையும் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக்கியுள்ளனர். இவர்களின் செயலில் சென்று நாம் பதிவு செய்தால் போதும் வீட்டிற்கே வந்து வாகனங்களை சர்வீஸ் செய்கின்றனர்.
தற்போது பெங்களூருவின் பல்வேறு இடங்களில் இவர்கள் கடைகளையும் நிறுவியுள்ளனர். முதல் ஆண்டில் ஒரு கடையில் தொடங்கியவர்கள் ஐந்தாவது ஆண்டிலேயே 71 கடைகள் என்று அளவை எட்டியுள்ளனர். தற்போது விஓசி ஆட்டோமொட்டிவ் நிறுவனத்திற்கு 17 கடைகள் உள்ளன. பெங்களூரு, ஹைதராபாத், கர்நாடகா, தெலுங்கானா ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ளது .
தொழில் தொடங்கப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளில் எந்த லாபத்தையும் இவர்களால் பெற முடியவில்லை ஆனால் மூன்றாவதாக ஆண்டிலிருந்து இவர்களது வருவாய் படிப்படியாக உயர்ந்துள்ளது. தற்போது இவர்கள் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடமிருந்து முதலீட்டை திரட்டி இவர்கள் தொடங்கிய தொழில் தற்போது நல்ல முறையில் வளர்ந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு தற்போது கார்ப்பரேட் வாரன்டி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிதியுதவி அளித்துள்ளது.விரைவில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலையும் தொடங்க உள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications