வோடபோன் சிஇஓ, இண்டிகோ சஞ்சய் குமார் ராஜினாமா..என்ன காரணம்..?!

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் எதிர்காலம் இந்தியாவில் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், இந்தியாவில் 5ஜி சேவைக்கான போட்டி தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில் வோடபோன் ஐடியாவின் தாய் நிறுவனமான வோடபோன் சிஇஓ நிக் ரீட் தனது பதவியில் இருந்து வெளியேற உள்ளார்.

இதன் மூலம் நிக் ரீட் பதவியில் வோடபோன் நிறுவனத்தின் பைனான்ஸ் பிரிவின் தலைவர் இடைக்கால சிஇஓ-வாக நியமிக்கப்பட உள்ளார். நிக் ரீட்-ன் 4 வருட சிஇஓ பதவி காலம் முடிந்த நிலையில் இப்பதவியை விட்டு வெளியேற உள்ளார்.

இந்த மாற்றம் மூலம் இந்தியா டெலிகாம் சந்தையில் தவித்து வரும் வோடபோன் ஐடியாவுக்கு நிதியுதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வோடபோன் சிஇஓ நிக் ரீட்

வோடபோன் சிஇஓ நிக் ரீட்

வோடபோன் சிஇஓ நிக் ரீட் தனது 4 வருட சிஇஓ பதவி காலம் முடிந்த நிலையில் இப்பதவியை விட்டு வெளியேற உள்ளார். இந்த நிலையில் வோடபோன் நிதி இயக்குனர் Margherita Della Valle இடைக்காலச் சிஇஓ-வாக நியமிக்கப்பட உள்ளார்.

இடைக்காலச் சிஇஓ

இடைக்காலச் சிஇஓ

Margherita சிஇஓ பதவியின் கீழ் வோடபோன் நிறுவனத்தின் செயல்பாட்டுச் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், பங்குதாரர் மதிப்பை மேம்படுத்துவதற்கு இந்நிறுவனத்தின் மூலோபாயத்தில் பணியாற்ற உள்ளார். இதற்கிடையில் வோடபோன் நிர்வாகம் புதிய சிஇஓ தேடும் பணியைத் துவங்க உள்ளது.

நிக் ரீட் பதவி காலம்

நிக் ரீட் பதவி காலம்

வோடபோன் சிஇஓ நிக் ரீட் கீழ் தான் கொரோனா காலத்தில் பல முக்கியமான மாற்றத்தைச் செய்தது. இதில் முக்கியமாக வோடபோன் தனது கவனத்தை ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா மீது திருப்பியுள்ளது.

டவர் வர்த்தகம்

டவர் வர்த்தகம்

இதேபோல் வோடபோன் தனது முக்கியமான சொத்துக்களை விற்பனை செய்து, நிறுவனத்தின் டவர் வர்த்தகத்தைத் தனி நிறுவனமாகப் பிரித்து அதிகப்படியான கவனத்துடன் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

வோடபோன் பங்குகள் சரிவு

வோடபோன் பங்குகள் சரிவு

வோடபோன் சிஇஓ நிக் ரீட் செய்த மாற்றங்கள் இந்நிறுவனத்தின் மதிப்பு உயரவில்லை, இதற்கு நேர் எதிராக நிக் ரீட் பதவியேற்றிய அக்டோபர் 2018 ல் இருந்து வோடபோன் பங்கு மதிப்பு சுமார் 40 சதவீதம் சரிந்துள்ளது.

டெலிகாம் சந்தை

டெலிகாம் சந்தை

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் டெலிகாம் சந்தை கடுமையாகப் போட்டியை எதிர்கொண்டு இருக்கும் இதே வேளையில் டிஜிட்டல் சேவை நிறுவனங்களும், ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டெலிகாம் சேவை நிறுவனங்கள் தொடர்ந்து வருவாய் சரிவை சந்தித்து வருகிறது. சமீபத்தில் T Mobile தனது முக்கியமான சந்தையை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ சஞ்சய் குமார்

இண்டிகோ சஞ்சய் குமார்

இதே நேரத்தில் இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ-வின் தலைமை உத்தி மற்றும் வருவாய் அதிகாரியான சஞ்சய் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சஞ்சய் குமார்

சஞ்சய் குமார்

சஞ்சய் குமார் இண்டிகோவுடன் அதன் ஆரம்ப நாட்களிலிருந்தே பணியாற்றி வருகிறார், இவருடைய பதவியில் சர்வதேச விற்பனை பிரிவின் தலைவர் வினய் மல்ஹோத்ரா, சஞ்சய் குமார் பணியை ஏற்க உள்ளார்.

ஏர் ஏசியா இந்தியா

ஏர் ஏசியா இந்தியா

சஞ்சய் குமார் 2007 இல் இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாகச் சேர்ந்தார், இப்பதவியில் 2018 வரை இருந்த அவர் ஏர் ஏசியா இந்தியாவில் சிஓஓ-வாகச் சேர்ந்தார். பின்னர் ஜனவரி 2020 இல் இண்டிகோவுக்குத் திரும்பி 2 வருடத்தில் வெளியேறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+