சாயம் வெளுக்கும் வோடபோன்.. இந்தியாவில் மட்டுமல்ல..!!

உலகின் பிரபலமான டெலிகாம் சேவை நிறுவனமான வோடபோன் குரூப் இந்தியாவில் மட்டும் அல்லாமல் பிற அனைத்து முக்கியச் சந்தைகளிலும் வர்த்தகத்தையும் வருமானத்தையும் இழந்து வருகிறது.

இந்த நிலையில் வோடபோன் குரூப் செலவுகளைக் குறைக்கும் விதமாகப் பல நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணிநீக்கம் அதன் வர்த்தகத் தலைமையகமான லண்டன் அலுவலகத்தில் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வோடபோன் குரூப் வர்த்தகம் செய்யும் அனைத்து சந்தைகளிலும் அதன் வர்த்தகம் வருமானம் ஆகிய அனைத்தும் மோசமான நிலைக்குச் சென்றுள்ள வேளையில் நவம்பர் மாதம் சுமார் 1 பில்லியன் யூரோ மதிப்பிலான செலவுகளைச் சேமிக்கும் விதமாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா

இந்தியாவில் செயல்படும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான வோடபோன் குரூப் சிஇஓ நிக் ரீட் தனது பதவியில் டிசம்பர் மாதம் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வோடபோன் நிறுவனத்தின் நிதி இயக்குனரான Margherita Della Valle இடைக்காலச் சிஇஓ-வாக நியமிக்கப்பட உள்ளார்.

வோடபோன் சிஇஓ நிக் ரீட்

வோடபோன் சிஇஓ நிக் ரீட்

வோடபோன் நிர்வாகம் அதன் சிஇஓ நிக் ரீட் தலைமையில் தான் கொரோனா காலத்தில் பல முக்கியமான மாற்றத்தைச் செய்தது. இதில் முக்கியமாக வோடபோன் தனது கவனத்தை ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா மீது திருப்பியது. ஆனால் இது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.

வோடபோன் பங்கு மதிப்பு

வோடபோன் பங்கு மதிப்பு

இதேவேளையில் நிக் ரீட்-ன் 4 வருட சிஇஓ பதவி காலம் முடிந்த நிலையில் இப்பதவியை விட்டு வெளியேற உள்ளார். வோடபோன் சிஇஓ நிக் ரீட் செய்த மாற்றங்கள் இந்நிறுவனத்தின் மதிப்பு உயரவில்லை, இதற்கு நேர் எதிராக நிக் ரீட் பதவியேற்றிய அக்டோபர் 2018 ல் இருந்து வோடபோன் பங்கு மதிப்பு சுமார் 40 சதவீதம் சரிந்துள்ளது.

ஹங்கேரி வர்த்தகம்

ஹங்கேரி வர்த்தகம்

மேலும் இந்த வார தொடக்கத்தில், வோடபோன் குரூப் ஹங்கேரி நாட்டில் உள்ள தனது வர்த்தகத்தை மொத்தமாக அந்நாட்டில் செயல்படும் ஐடி நிறுவனமான 4iG மற்றும் ஹங்கேரிய மாநில அரசுக்கு மொத்தமாக 1.7 பில்லியன் யூரோ-வுக்கு விற்க ஒப்புக்கொண்டது.

அமேசான் பணிநீக்கம்

அமேசான் பணிநீக்கம்

அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்தபடி உலகளவில் 18000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் திட்டத்தை நிர்வாகம் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக இந்தியாவிலும் 2வது பணிநீக்க சுற்று துவங்கியுள்ளதால் இந்தியாவில் டெக், மனிதவள பிரிவு எனத் துறையில் இருந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.

FTX நிறுவனம் திவால்

FTX நிறுவனம் திவால்

மேலும் கிரிப்டோகரன்சி சந்தையில் FTX நிறுவனம் திவாலான நிலையில் அனைத்து முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

crypto.com நிறுவனம்

crypto.com நிறுவனம்

இதற்கிடையில் crypto.com என்னும் நிறுவனம் தடுமாற்றத்தைச் சமாளிக்க முடியாமல் சுமார் 20 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. கிரிப்டோகரன்சிகளின் தொடக் வீழ்ச்சி காரணமாகக் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் கிரிப்டோ துறையில் பணியாற்றும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கிரிப்டோ சந்தை பணிநீக்கம்

கிரிப்டோ சந்தை பணிநீக்கம்

சமீபத்தில் காயின்பேஸ் குளோபல் இன்க், Huobi நிறுவனம் சுமார் 20 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது, இதேபோல் Genesis கிரிப்டோ தளம் சுமார் 30 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+