'கவலை வேண்டாம், நாங்க இருக்கோம்'.. வோடபோன் ஐடியா, ஏர்டெல்-க்கு அடுத்த ஜாக்பாட்..!

இந்திய டெலிகாம் நிறுவனங்களைக் கடன் சுமை மற்றும் நிலுவைத் தொகை பாதிப்பில் இருத்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய டெலிகாம் அமைச்சகம் பரிந்துரை செய்த முக்கியமான தளர்வு திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தத் தளர்வு திட்டத்தில் மிகவும் முக்கியமானது டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை, பங்குகளாக அரசுக்குச் செலுத்தும் திட்டத்திற்கான முடிவை விரைவில் எடுக்க மத்திய டெலிகாம் அமைச்சகம் இறங்கியுள்ளது.

டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாம் நிறுவனங்கள்

மத்திய அரசு முதலில் டெலிகாம் நிறுவனங்கள் வைத்திருக்கும் நிலுவை தொகையை மட்டும் தான் பங்குகளாக மாற்றி அரசுக்கு அளிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது நிலுவை தொகையைச் செலுத்த 4 வருடம் மோரோடோரியம் கொடுக்கப்பட்டு உள்ள காரணத்தால், இந்த 4 வருடத்திற்கு நிலுவை தொகைக்கான வட்டி தொகையும் பங்குகளாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

டெலிகாம் அமைச்சகம் - நிதியமைச்சகம்

டெலிகாம் அமைச்சகம் - நிதியமைச்சகம்

இந்நிலையில் இதை எப்படிச் செய்ய வேண்டும், எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதை டெலிகாம் அமைச்சகமும், நிதியமைச்சகமும் ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

நிலுவை தொகை சுமை

நிலுவை தொகை சுமை

இத்திட்டம் குறித்து விரைவான முடிவுகளை எடுத்தால் டெலிகாம் நிறுவனங்கள் வைத்திருக்கும் பெருமளவிலான நிலுவை தொகை சுமையைக் குறைப்பது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு வருடமும் நிலுவை தொகைக்கான வட்டியும் மிச்சப்படுத்த முடியும்.

குமார் மங்களம் பிர்லா கடிதம்

குமார் மங்களம் பிர்லா கடிதம்

மத்திய அரசு டெலிகாம் துறைக்கான தளர்வுகளை அளிக்க முக்கியக் காரணமாக இருந்தது, வோடபோன் ஐடியா நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள நிலையில் இந்நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர் ஆன குமார் மங்களம் பிர்லா தனது பங்குகளை மொத்தமாக அரசுக்கு செலுத்த தயார் என்றும் வோடபோன் ஐடியா நிறுவனத்தை எப்படியாவது காப்பாற்றுங்கள் எனக் கடிதம் அனுப்பிய பின்பு, அரசு டெலிகாம் நிறுவனங்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது.

வட்டி தொகை

வட்டி தொகை

இந்நிலையில் தற்போது வெளியான தகவல் படி வோடபோன் ஐடியா, ஏர்டெல் உட்பட அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களது AGR கட்டணத்தைச் செலுத்த 4 வருடம் சலுகை பெற்றுள்ள நிலையில், இந்த 4 வருடம் மோரோடோரியம் காலத்தில் நிலுவை தொகைக்கான வட்டி தொகையை ஒவ்வொரு வருடமாகவோ அல்லது, 4 வருடம் முடிந்த பின்பு மொத்தமாகவோ பங்குகளாக மாற்றி அரசு செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

வோடபோன் ஐடியா திட்டம்

வோடபோன் ஐடியா திட்டம்

இந்த முறையைப் பயன்படுத்தி வோடபோன் ஐடியா தற்போது சுமார் 15,000 கோடி ரூபாய் அளவிலான வட்டி தொகைக்குப் பங்குகளாக மாற்றி அரசுக்குச் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த முறையை யார் பயன்படுத்தினாலும் MCLR விகிதத்துடன் 2 சதவீதம் கூடுதலான வட்டியை செலுத்த வேண்டும் என டெலிகாம், ஐடி மற்றும் ரயில்வே துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்னாவா தெரிவித்துள்ளார்.

 100 சதவீத அன்னிய முதலீடு

100 சதவீத அன்னிய முதலீடு


நேற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்த டெலிகாம் துறை தளர்வு திட்டத்தில் இத்துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதுவும் ஆட்டோமேட்டிங் பிரிவு அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் குமார் மங்களம் பிர்லா வைத்திருக்கும் பங்குகளை வோடபோன் கைப்பற்றவும் வாய்ப்பு உள்ளது.

உரிமம் மற்றும் ஸ்பெக்டரம் கட்டணம்

உரிமம் மற்றும் ஸ்பெக்டரம் கட்டணம்

மேலும் டெலிகாம் நிறுவனங்களின் உரிமம் கட்டணம் மற்றும் ஸ்பெக்டரம் கட்டணம் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்விரண்டின் மீதான அபராதம் நீக்கப்பட்டும், வட்டி அனைத்தும் மாதாந்திர அடிப்படையில் கணக்கீடு செய்யாமல் வருடாந்திர அடிப்படையில் கணக்கீடு செய்யப்படவும் அறிவிப்பு நேற்று வெளியானது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+