இந்தியாவின் 3 முக்கியத் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் நிலையில் வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் இழந்து வரும் நிறுவனங்களின் நிதி நிலைமை மிகவும் மோசமாக மாறி வருகிறது.
இதன் காரணமாக டெலிகாம் சேவை கட்டணத்தை ஜனவரி மாதம் முதல் உயர்த்த ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
ஒரு மாதம் சம்பளம் போனஸ்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதைக் கட்டுப்படுத்தவும், ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் வோடபோன் அனைத்து ஊழியர்களுக்கும் நவம்பர் மாதம் சம்பளத்தில் 2 மாத சம்பளத்தைக் போனஸாக கொடுத்துள்ளது.
ஊழியர்களுக்குப் பதவி உயர்வு
இதுமட்டும் அல்லாமல் பல உயர் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு கொடுத்துள்ளது. இதில் முக்கியமாக இந்நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் தலைவரான அவினீஷ் கோசலா-விற்குச் சீஃப் மார்க்கெட்டிங் ஆபீசர் (CMO) பதவியைக் கொடுத்துள்ளது. இந்தப் பதவி வோடபோன் நிறுவனத்தில் சுமார் 2 வருடம் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
போனஸ் தொகைக்குக் கண்டிஷன்
ஆனால் இந்த ஒரு மாத கூடுதல் போனஸ் சம்பளத்தில் ஒரு செக் வைத்துள்ளது வோடபோன் நிர்வாகம். இந்தப் போனஸ் தொகை மார்ச் 31, 2021 வரையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என வோடபோன் ஐடியா நிர்வாகம்
தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மார்ச் 31, 2021க்கு முன் நிறுவனத்தை விட்டு வெளியேறுபவர்களுக்குத் தங்களது பைனல் செட்டில்மென்ட் தொகையில் இந்த ஒரு மாத சம்பளம் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வோடபோன் ஜடியா நிர்வாகம்
வோடபோன் ஜடியா நிறுவனத்தின் 4ஜி சேவையிலும், வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்ட பின்பும் ஊழியர்களைத் தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மிகவும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
நிதி திரட்டும் திட்டம்
வோடபோன் ஜடியா நிறுவன அதிகளவில் நஷ்டத்திலும் வருமான சரிவிலும் இயங்கும் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது நிதி நிலையை மேம்படுத்தத் தீவிரமாக நிதி திரட்டும் திட்டத்தில் இறங்கியுள்ள நிலையில் இந்நிறுவனத்தில் இருந்து பல உயர் அதிகாரிகள் வெளியேறுவது வோடபோன் ஐடியா நிர்வாகத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது. இதன் எதிரொலியாகவே தற்போது ஒரு மாத சம்பளத்தைப் போனஸ் ஆகக் கொடுத்துள்ளது.
உயர் அதிகாரிகள் வெளியேற்றம்
சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் CTO விஷ்ஹாத் வோரா, நிதி பிரிவின் தலைவர் குமார் தாஸ், chief technology security officer (CTSO) அமித் பிரதான், பிராண்ட் ஆபீசர் கவிதா நாயர் ஆகிய உயர்மட்ட அதிகாரிகள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவு
டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டம்பர் மாதம் பார்தி ஏர்டெல் சுமார் 37.7 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ள நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 14.6 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
ஆனால் வோடபோன் ஐடியா இதே செப்டம்பர் மாதத்தில் 46.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.


Click it and Unblock the Notifications