இந்திய தொலைதொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா , ஏசியானட் நிறுவனத்துடன் இணைந்து கேரளாவில் Vi One (3-in-1 package) என்ற பேக்கேஜை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரே பிளானின் கீழ் செல்போன் ரீசார்ஜ், பிராட்பேண்ட் மற்றும் 13 ஓடிடி தளங்களுக்கான அணுகல் என விரிவான சலுகைகளை பெற முடியும்.
Vi One என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் தரமான மற்றும் அவர்களுக்கு சௌகரியமான சேவைகளை பெற முடியும் என வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது தான் எங்களின் நோக்கம் அதனை மையமாகக் கொண்டுதான் இப்படி ஒரு திட்டத்தை நாங்கள் கொண்டு வந்து இருக்கிறோம் என வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அவ்னேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் செல்போனுக்கான ப்ரீபெய்ட் கனெக்சன் கிடைக்கிறது. இதன்படி அன்லிமிடெட் கால் , ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி டேட்டா மற்றும் 40 மற்றும் 100 Mbps வேகங்களில் பிராட்பேண்ட் வசதி வழங்கப்படுகிறது. 13 ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் இலவசமாக கிடைக்கின்றன. டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி மற்றும் பல்வேறு தளங்களை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Vi Movies & TV செயலி வாயிலாக அனைத்து ஓடிடி தளங்களையும் ஒரே ரீசார்ஜில் பல்வேறு கருவிகளிலும் காண முடியும் என கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் அன்லிமிடெட் டேட்டா, வார இறுதி நாட்களில் 200ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் மேலும் மாதம் இரண்டு முறை போனஸ் டேட்டா ஆகிய அம்சங்களும் இதில் உள்ளன. தற்போதைக்கு கேரளாவில் இந்த சேவை இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 40 Mbps டேட்டா வேகம் கொண்ட திட்டம் 3 மாதங்களுக்கு 2,499 ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கிறது. இது ஓராண்டுக்கான பேக்கேஜ் என்றால் 9,555 ரூபாய் ஆகும்.
100 Mbps டேட்டா வேகா கொண்ட திட்டத்தில் 3 மாதங்களுக்கு 3,399 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும், ஓராண்டுக்கு 12955 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். கேரளாவில் ஏற்கனவே வோடபோன் வாடிக்கையாளராக இருப்பவர்கள் Vi One Fiber சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளாக மக்களின் பொழுதுபோக்கை தரமானதாக மாற்றி வரும் ஏசியானட் தற்போது மொபைல் சேவை, பொழுதுபோக்கு, பிராட்பேண்ட் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தருவதில் மகிழ்ச்சி அடைகிறது என ஏசியானட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மூர்த்தி சகாந்தி தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications