கடைசில வோடபோன் ஐடியாவும் கட்டணத்தை உயர்த்திவிட்டது.. மக்களுக்கு கூடுதல் சுமை..!

சென்னை: இந்திய தொலைத்தொடர்பு துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருக்கும் வோடபோன் ஐடியா, மூன்று வருடங்களில் முதல் முறையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் பல மாதங்களாக கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கூறிவந்த நிலையில் முதலாவதாக ரிலையன்ஸ் ஜியோ-வும், அதை தொடர்ந்து பார்தி ஏர்டெல்-ம் தனது கட்டணத்தை உயர்த்தியிருக்கும் வேளையில் தற்போது வோடபோன் ஐடியாவும் அவர்களுடன் இணைந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

கடைசில வோடபோன் ஐடியாவும் கட்டணத்தை உயர்த்திவிட்டது.. மக்களுக்கு கூடுதல் சுமை..!

ஜியோ மற்றும் ஏர்டெல் கடந்த இரண்டு ஆண்டுகளில் 5G தொழில்நுட்ப சேவைக்காக பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்த நிலையில், அதனை திருப்பி எடுக்கவே இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த கட்டண உயர்வு மூலம் டெலிகாம் நிறுவனங்களின் கடன்களை குறைப்பது மட்டும் அல்லாமல் சேவை விரிவாக்கத்திலும் ஈடுபட முடியும்.


இந்த கட்டண உயர்வு சுற்றில் பார்தி ஏர்டெல் 10-21 சதவீதமும், ரிலையன்ஸ் ஜியோ 13-27 சதவீதம் வரையிலான கட்டணத்தை உயர்த்தியது. இதை தொடர்ந்து தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 4ம் தேதி முதல் தங்களின் 17 ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் கட்டணத்தை 10% முதல் 23% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் 28 நாட்கள் செல்லுபடியாகும் அடிப்படை திட்டத்தின் கட்டணம் ரூ.11 உயர்ந்து ரூ.179 லிருந்து ரூ.199 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

வோடபோன் ஜடியா தளத்தில் மிகவும் பிரபலமான திட்டமாக இருக்கும் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தின் விலை, முன்பு ரூ.719 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.859 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 1.5 ஜிபி இண்டர்நெட் டேட்டா வழங்கப்படும்.

இதேபோல் வோடபோன் ஜடியா நிறுவனத்தின் வருடாந்திர திட்டத்தின் கட்டணம் சுமார் 21% உயர்ந்து ரூ.2,899 லிருந்து ரூ.3,499 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 24 ஜிபி டேட்டா வரம்புடன் 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தற்போதைய விலையான ரூ.1,799 ஆகவே உள்ளது.

இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் வாடிக்கையாளர்கள் கொண்ட சந்தையாக இருந்தாலும், மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலித்து வருகிறது. இந்தி டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ஜியோ நிறுவனம், இலவச திட்டங்கள் முதல் குறைந்த விலையில் சேவைகள் என சந்தாதாரர்களை ஈர்க்கும் யுக்தியைக் கடைப்பிடித்தது.

இதன் காரணமாக, போட்டியை சமாளிக்க சக டெலிகாம் சேவை நிறுவனங்களும் கட்டணத்தை குறைத்தது மட்டும் அல்லாமல், கட்டணத்தை தனியாக உயர்த்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில் மாடிக்கொண்டது. இந்த சூழ்நிலையில் தான் ஏர்டெல் கட்டணத்தை உயர்த்த அழைப்பு விடுத்தது, இதன் வாயிலாக அனைத்து முன்னணி நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் கட்டணத்தை உயர்த்தாத டெலிகாம் சேவை நிறுவனங்கள் தற்போது உயர்த்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+