மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர் ஆபரேட்டராக இருந்து இன்றும் பெருத்த கடனில் சிக்கித் தவித்து வரும் வோடபோன் ஐடியா, கடனை திரும்ப செலுத்த முடியாமல் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது எனலாம்.
இது போட்டி நிறுவனங்களுக்கு எதிராக அதன் செயல்பாட்டினையும் குறைக்கும் விதமாக உள்ளது.
இந்த நிலையில் தான் வோடபோன் ஐடியா நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவற்றுடன் புதிய கட்ட பேச்சு வார்த்தைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதற்காக பேச்சு வார்த்தை
ET அறிக்கையின் படி, வோடபோன் நிறுவனம் 3000 - 4000 கோடி ரூபாய் கடனை திரும்ப அடைப்பதற்கு, நிதி திரட்ட திட்டமிட்டு வருவதாகவும், இந்த நிலையில் வங்கிகளிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
கடனை அடைக்க முடியும்
வோடபோன் நிறுவனத்தின் எதிர்பார்ப்பினை போல கடன் கிடைத்தால், இண்டஸ் டவர்ஸ் மற்றும் நெட்வொர்க் எக்யூப்மெண்ட்ஸ், நோக்கியா மற்றும் எரிக்சன் போன்ற டவர் நிறுவனங்களுக்கும் கடனை அடைக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளது.
எவ்வளவு கடன்?
இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் 2298.1 கோடி ரூபாய் கடனையும், இதே அமெரிக்கன் டவர் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 1600 கோடி ரூபாய் கடனுக்கு, மாற்றத்தக்க கடனீட்டு பத்திரங்களாக மாற்றுவதற்காக செயல்பாட்டினையும் நிறுவனம் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து கடன் அதிகரிப்பு
வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முறை நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. எனினும் இன்று வரையில் எதுவும் கைகொடுத்ததாக தெரியவில்லை. மாறாக அதன் பேலன்ஸ் சீட்டில் கடன் விகிதம் மட்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
அரசுக்கு வழங்க ஒப்புதல்
கடந்த வாரத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 16,133 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அரசுக்கு வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த ஒதுக்கீட்டுக்கு பிறகு அரசின் வசம் 33.44% பங்குகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிதி திரட்டலாம்
தலா 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட இந்த பங்கினில் 16,133,198,899 ஈக்விட்டி பங்குகளில், 10 வெளியீட்டு விலையுடன் கணக்கிடும்போது 161,331,848,990 ரூபாயாக கொடுக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
இது கடனில் இருந்து விடுபடவும், அதானி குழுமம் தொடர்ந்து நிறுவனத்தை நடத்துவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்பதற்கும் உதவும் என்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு முயற்சிகள்
அரசு இந்த பங்கு ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்த பிறகு வோடபோன் ஐடிய பங்கின் விலையானது 25% அதிகரித்துள்ளது. இது நிறுவனத்திற்கு தேவையான நிதியினை திரட்ட வழிவகுக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.
தொடர்ந்து ஜியோவின் வருகைக்கு பிறகு கடும் போட்டியின் மத்தியில், கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் வோடபோன் நிறுவனம், தொடர்ந்து பல வழிகளில் நிதி திரட்ட முயற்சித்து வருகின்றது. ஆனால் இன்று வரையில் எதுவும் கைகொடுத்ததாக தெரியவில்லை எனலாம்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications