இந்திய டெலிகாம் சந்தையில் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் வருவாயை இழந்து வரும் வோடபோன் ஐடியாவுக்கு மிகப்பெரிய பிரச்சனை வந்துள்ளது.
இந்தியாவில் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு டெலிகாம் டவர் சேவை அளித்து வரும் இன்டஸ் டவர்ஸ் நிலுவைத் தொகையைச் செலுத்த உத்தரவிட்டு உள்ளது. இல்லையெனில் சேவைகள் துண்டிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இப்படி மட்டும் செய்தால் வோடபோன் ஐடியா நிலைமை என்ன..
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு மட்டும் அல்லாமல் டவர் நிறுவனங்களுக்கும் அதிகப்படியான தொகையை நிலுவையில் வைத்துள்ளது. இதில் டவர் நிறுவனங்களுக்கு மட்டும் சுமார் 10000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பாக்கி வைத்துள்ளது.
7000 கோடி ரூபாய் இதில் 7000 கோடி ரூபாயை இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கும், மீதமுள்ளவை அமெரிக்கன் டவர் கம்பெனிக்கும் பாக்கி வைத்துள்ளது. இந்த நிலையில் இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் 7000 கோடி ரூபாய் அளவிலான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த கோரி கண்டிப்பான கடிதத்தை வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளது.
இதில் 7000 கோடி ரூபாயை இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கும், மீதமுள்ளவை அமெரிக்கன் டவர் கம்பெனிக்கும் பாக்கி வைத்துள்ளது. இந்த நிலையில் இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் 7000 கோடி ரூபாய் அளவிலான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த கோரி கண்டிப்பான கடிதத்தை வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளது.
டவர் இணைப்பை துண்டிப்பு
இத்தொகையைச் செலுத்தாத பட்சத்தில் வோடபோன் ஐடியாவுக்கான டவர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இது மட்டும் நடந்தால் வோடபோன் ஐடியாவின் 255 மில்லியன் வாடிக்கையாளர்கள் டெலிகாம் தொடர்பை இழக்க வேண்டி வரும். VI நிறுவனம் ஏற்கனவே அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.
இண்டஸ் நிறுவனம்
இண்டஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் 477.3 கோடி ரூபாய் மட்டுமே பெற்று சுமார் 66.3 சதவீத வருடாந்திர சரிவை பதிவு செய்துள்ளது. இந்தச் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து தாமதமாகக் கிடைக்கும் பேமெண்ட்கள் தான் எனத் தெரிவித்துள்ளது.
1,86,474 டெலிகாம் டவர்கள்
ஜூன் மாத இறுதி தரவுகள் படி இண்டஸ் டவர்ஸ் சுமார் 1,86,474 டெலிகாம் டவர்களை நிர்வாகம் செய்து வருகிறது, இந்நிறுவனத்திற்கு வோடபோன் ஐடியா தான் மிகப்பெரிய வாடிக்கையாளர். மேலும் இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் பார்தி ஏர்டெல் 47.76 சதவீத பங்குகளையும், வோடாபோன் குரூப் 21.05 சதவீத பங்குகளையும் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications