தற்போதைய உலகில், தடையின்றி டேட்டா கிடைப்பது அவசியம். மொபைல் டேட்டா வேலை முதல் கல்வி வரை, உடல்நலம் மற்றும் ஓய்வு முதல் வாழ்க்கை முறை வரை அனைத்தையும் வழங்குகிறது. எனவே, அன்லிமிடெட் டேட்டா அனுபவத்திற்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்ய, இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர் வோடபோன் ஐடியா, இந்தியாவின் முதல் அன்லிமிடெட் டேட்டா திட்டமான Non Stop Hero ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான டேட்டா கோட்டா காலாவதியின் சிக்கலைத் தீர்க்க வடிவமைக்கப்பட்ட நான் ஸ்டாப் ஹீரோ'' திட்டம் 24 மணி நேரமும் அன்லிமிடெட் டேட்டா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா ஒரு டேட்டா புரட்சியைக் கண்டு வருகிறது. டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் டேட்டா பயன்பாடு 288 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) ஆண்டு அறிக்கையின்படி, மார்ச் 2023 இல் நாட்டில் இண்டர்நெட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 88.1 கோடியிலிருந்து மார்ச் 2024க்குள் 95.4 கோடியாக அதிகரித்துள்ளது. இது மார்ச் 2024க்குள் ஒரு பயனரின் சராசரி மாதாந்திர டேட்டா பயன்பாடு 20.27 ஜிபியை எட்டியுள்ளது. மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதன் மூலம் அதிகரித்துள்ளது.
வோடபோன் இந்தியாவின் நான்ஸ்டாப் ஹீரோ'' திட்டம், பல்வேறு ரீசார்ஜ் பேக்குகளில் OTT நன்மைகளுடன் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 100 SMS ஆகியவற்றை வழங்கும் அதிவேக இணைப்புக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்தியாவில் சிறந்த 4ஜி நெட்வொர்க் வழங்குநராக வோடபோன் ஐடியா ஆனது OpenSignal ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது OpenSignal இன் நவம்பர் 2024 4G நெட்வொர்க் அனுபவ அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. இதன் டேட்டா வேகம், கால்ஸ், கேமிங் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. இந்த புதிய சலுகை வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுப்பதில் வோடபோன் ஐடியாவின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.
365 ரூபாய்க்கு அன்லிமிடெட் ஹீரோ பிளான்: வெறும் 365 ரூபாயில் தொடங்கும் இந்த Non Stop Hero திட்டம் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கிடைக்கிறது. ரீசார்ஜ் பேக்குகளில் உள்ள நன்மைகள் வெவ்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடும்.
Vi இன் அதிகாரப்பூர்வ அறிக்கை: வோடபோன் ஐடியாவின் சிஎம்ஓ அவ்னீஷ் கோஸ்லா கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இணைப்புத் தீர்வுகளை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கம் எனவும், வோடபோன் ஐடியாவில், பயனர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யும் புதுமையான திட்டங்களை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும், ரீசார்ஜ் காலம் முழுவதும் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் டேட்டாக்களை பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில், நான்ஸ்டாப் ஹீரோ பிளான் ஒரு கேம்-சேஞ்சர் ஆக இருக்கும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications