தொடர் நஷ்டத்தில் வோடபோன் ஐடியா.. 4வது காலாண்டில் எவ்வளவு இழப்பு தெரியுமா?

தொலைத் தொடர்பு துறையில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனம் மார்ச் காலாண்டில், 6563.1 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 7022.8 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் விகிதம் 6.46 சதவீதம் அதிகரித்து, 10,271.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டில் 9647.8 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 அர்பு விகிதம் அதிகரிப்பு

அர்பு விகிதம் அதிகரிப்பு

இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் கட்டண உயர்வு செய்ததையடுத்து, வருவாய் அதிகரிப்பினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக அர்பு விகிதம் 115 ரூபாயில் இருந்து, 124 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 7.5 சதவீதம் அதிகமாகும். இதே தினசரி சராசரி வருவாய் விகிதம் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

எபிட்டா விகிதம்

எபிட்டா விகிதம்

இது வோடபோன் ஐடியா இணைப்புக்கு பிறகு நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. எபிட்டா விகிதம் 2120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மூன்றாவது காலாண்டில் 1620 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடன் விகிதம்

கடன் விகிதம்

மார்ச் 31, 2022 நிலவரப்படி, மொத்த கடன் விகிதம் 1,97,880 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் ஒத்திவைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் கட்டணம் 1,13,860 கோடி ரூபாயாகவும், ஏஜிஆர் விகிதம் 65,950 கோடி ரூபாயாகவும் உள்ளது. அரசு மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்களில் 18,070 கோடி ரூபாய் கடனாக உள்ளது.

4 ஜி வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

4 ஜி வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

ஒட்டுமொத்த வாடிகையாளர்கள் விகிதம் கட்டண அதிகரிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், 4ஜி வாடிக்கையாளார்கள் எண்ணிக்கையாகது அதிகரித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டிஜிட்டல் அனுபவத்தினை கொடுக்கும் விதமாக செயல்பட்டு வரும் நிறுவனம், மார்ச் காலாண்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது என வோடபோன் ஐடியாவின் தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தக்கர் தெரிவித்துள்ளார்.

சவால்கள்

சவால்கள்

தொடர்ந்து கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது தான் சற்றே மேம்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 4ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையானது மேன்மையடையத் தொடங்கியுள்ளது. எனினும் தொடர்ந்து நஷ்டம், கடன் பிரச்சனை என்பது, அதன் செயல்பாட்டினை விரிவாக்கம் செய்ய முடியாமலும் தவித்து வருகின்றது. நிதி திரட்டும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வந்தாலும், அது பெரியளவில் கைகொடுத்ததாக தெரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+