கொரோனா காலத்தில் சில துறைகள் மட்டும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல், வழக்கத்திற்கு மாறாக சிறப்பாகவே செயல்பட்டன எனலாம்.
ஏனெனில் கடுமையாக லாக்டவுன் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பலரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். பலரும் ஆன்லைன் வகுப்புகள், பணிகள், வீட்டில் இருந்து வேலை செய்வோர், பொழுதுபோக்கு அம்சங்கள் என பலவும் ஸ்மார்ட்போன் வழியாகவே நடந்தது.
இதனால் கால்ஸ் சேவை மற்றும் டேட்டா என பலவற்றிற்கு தேவை அதிகரித்தது. இதனால் வழக்கத்திற்கு மாறாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கல்லா கட்டின.
பற்பல சலுகைகள்
இன்னும் சொல்லபோனால், கொரோனாவிற்கு முன்னர் போட்டி, செலவினம் அதிகம், ஏஜிஆர் பிரச்சனை காரணமாக பல நிறுவனங்களும் மோசமான சரிவினைக் கண்டுள்ளது. ஆனால் கொரோனா காலத்தில் தேவை அதிகரித்ததால் இயல்பு நிலைக்கு சற்றே திரும்பியுள்ளன. இதற்கிடையில் தான் தங்களது ஏற்றத்தினை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் புதிய பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.
வோடபோன் ஐடியாவின் ஆஃபர்
அந்த வகையில் வோடபோன் நிறுவனம் தினசரி 4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் உள்ளிட்டவற்றை தினசரி 11 ரூபாய்க்கும் கீழாகவே வழங்கி வருகிறது. இதனை 299 திட்டத்தின் மூலம் வழங்கி வருகின்றது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு வேலிடிட்டியை கொண்டுள்ளது.
மொத்தம் 112 ஜிபி டேட்டா
வோடபோன் நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் 112 ஜிபி அதிவேக டேட்டாவினை வழங்கி வருகின்றது. இந்த 299 ரூபாய் திட்டத்தினை தினசரி விகிதமான கணக்கிட்டார் 11 ரூபாய்க்கும் குறைவாகவே வரும். இதே ஏர்டெல் நிறுவனம் கிட்டதட்ட இதே கட்டணத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவினையே வழங்கி வருகின்றன.
வேறு என்னென்ன சலுகைகள்?
இந்த திட்டத்தில் பிங்க் ஆல் நைட் வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இணையத்தை 12 மணி முதல் காலை ஆறு மணி வரை இலவசமாக பெறலாம். இது தவிர இந்த திட்டத்தில் வார இறுதி தரவுகள் மற்றும் வீ திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான இலவச சந்தாவினையும் பெறலாம்.
மற்றொரு சூப்பர் திட்டம்
இதே இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் 399 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினையும் வழங்குகிறது. இது 56 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது. இது வரம்பற்ற கால் சேவை மற்றும் ஒரு நாளக்கு 1.5ஜிபி டேட்டா, 100 இலவச எஸ் எம் எஸ் என பலவற்றையும் வாரி வழங்குகிறது. இதனுடன் பிங்க் ஆல் நைட் சேவை மற்றும் வீகெண்ட் ரோ ஓவர் டேட்டா, வீ மூவிஸ் என பல் சலுகைகளையும், இது தவிர அடுத்த ரீசார்ஜூக்கு 40 தள்ளுபடியும் கிடைக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications