தொடர் நஷ்டத்தில் வோடபோன் ஐடியா.. டிசம்பர் காலாண்டில் ரூ.4,532 கோடி நஷ்டம்..!

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே, தொடர்ந்து மோசமானதொரு ஆண்டாகவே இருந்து வருகிறது என்று கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஜியோவின் வருகைக்கு பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன.

ஏன் பல நிறுவனங்கள் அந்த சமயத்தில் காணாமல் போயின. ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு எதிராக களத்தில் நின்று போட்டியிட்டு வருகின்றன.

தொடர் நஷ்டம்

தொடர் நஷ்டம்

இதற்கிடையில் தொடர்ந்து வோடபோன் நஷ்டத்தினை மட்டுமே கண்டு வருகிறது. நஷ்டத்தினை குறைக்க வோடபோன் நிறுவனமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனினும் கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4,532 கோடி ரூபாயாக பலத்த நஷ்டத்தினை கண்டுள்ளது. எனினும் இது முந்தைய ஆண்டை காட்டிலும் பரவாயில்லை எனலாம். ஏனெனில் முந்தைய ஆண்டில் 6,439 கோடி ரூபாயாக இருந்தது.

நிதி திரட்ட திட்டம்

நிதி திரட்ட திட்டம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமானது இது தனது சேவை தரத்தினை மேம்படுத்தியுள்ள நிலையில், இது மூன்றாவது காலாண்டில் 7,218 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டிருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு 25,000 கோடி ரூபாய் நிதியினையும் திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக சாத்தியமான முதலீட்டாளர்களிடையே தற்போது பேச்சு வார்த்தையை நடத்தி வருவதாகவும் சமீபத்தில் கூறியது.

அர்பு விகிதம்

அர்பு விகிதம்

வீ-யின் வருவாய் கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 10,891 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 11,089 கோடி ரூபாயாக இருந்துள்ளது. எனினும் இந்த நிறுவனத்தின் அர்பு விகிதம் 121 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலண்டில் 119 ரூபாயாகவும், இதே முந்தைய ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் 109 ரூபாயாகவும் இருந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு

இந்த நிறுவனத்தின் எபிடா 4,286 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3,421 கோடி ரூபாயாக இருந்தது. இதே ஜூலை - செப்டம்பரில் 4,152 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

இதற்கிடையில் 4ஜி அடிப்படையிலான வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். இது 106.1 மில்லியனாக இருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 109.7 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது இனி வரும் காலாண்டுகளிலும் வோடபோனுக்கு கைகொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+