கைவிரித்த உச்ச நீதிமன்றம்.. பாதாளம் நோக்கி சென்ற வோடபோன் பங்கு விலை.. செவி மடுக்காத ஏர்டெல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமான ஆண்டாகவே இருந்து வருகிறது.

ஜனவரி 23ம் தேதிக்குள் ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்காததற்காக, தொலைத் தொடர்பு நிறுவனங்களை கடுமையாக கண்டித்ததோடு, செயல்படுத்தாத அதிகாரிகளையும் கண்டித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும் உச்ச நீதிமன்றம் ஏன் உங்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று காட்டமாகத் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கூறுங்கள் என்ன காரணம்

கூறுங்கள் என்ன காரணம்

மேலும் மார்ச் 17-க்குள் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையை டெபாசிட் செய்யாததற்கு காரணத்தையும் விளக்க வேண்டும். மேலும் ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கும் காரணம் கூற வேண்டும். மேலும் தங்களது ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்த அதிக நேரம் வழங்குமாறு தொலைத் தொடர்பு நிறுவனம் அளித்த மனு மீதான விசாரணையில், நீதிமன்றம் அதன் உத்தரவுகளுக்கு இணங்காத அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

சட்டம் இருக்கிறதா? இல்லையா?

சட்டம் இருக்கிறதா? இல்லையா?

உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டாம் என்று கடிதம் எழுதிய தொலைத்தொடர்பு துறையின் டெஸ்க் அதிகாரியை கடுமையாக எச்சரித்ததோடு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி எப்படி தொலைத் தொடர்பு துறையினர் எப்படி டெஸ்க் அதிகாரிக்கு கடிதம் எழுத முடியும். இந்த நாட்டில் சட்டம் இருக்கிறதா இல்லையா? இப்படித்தான் நீதிமன்றத்தை நடத்துவீர்களா? என்றும் நீதிபதி அருண் மிஸ்ரா காட்டமாக தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நிவாரணம் இல்லை

நிவாரணம் இல்லை

இது குறித்து அக்யூட் ரேட்டிங்ஸ் அன்ட் ரிசர்ச்சின் மதிப்பீடுகளின் தலைவர் சுமன் சவுத்ரி கூறுகையில், மார்ச் 17, 2020ம் தேதிக்குள் நிலுவையில் உள்ள ஏஜிஆர் நிலுவையைத் தொகையைத் தீர்க்குமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் உச்ச நீதிமன்றம் எந்தவொரு நிலுவைத் தொகை பற்றிய நிவாரணத்தை தர முடியாது என்று கூறியதையடுத்து, வோடபோன் ஐடியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.

கட்டணம் அதிகரிக்கலாம்

கட்டணம் அதிகரிக்கலாம்

குறிப்பாக வோடபோன் ஐடியாவின் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் 55,000 கோடி ரூபாயும். இதே ஏர்டெல் நிறுவனம் 35,500 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருந்ததாலும், அவர்களின் தற்போதைய நிதி நிலைமைக்கு மத்தியில் இதை செலுத்த முடியுமா என்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் அக்யூட் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 20 - 25% வரை தங்களது கட்டணங்களை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.

நிலுவையை செலுத்துங்கள்

நிலுவையை செலுத்துங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையான 1.47 லட்சம் கோடியை செலுத்துமாறும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே கூறியது. இது அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைகற்றை, பயன்பாட்டிற்கான கட்டணம், ஈவுத் தொகை, மற்று சொத்து வருமானம் உள்ளிட்டவையை சரிகட்டப்பட்ட நிகர வருவாயாக கணக்கிடப்பட்டு, அதில் குறிப்பிட்ட தொகையை ஆண்டு உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

பங்கு விலை வீழ்ச்சி

பங்கு விலை வீழ்ச்சி

இந்த நிலை தொலைத்தொடர்பு துறையினர் கொஞ்சமேனும் இந்த தொகை குறைக்கப்படலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் உச்ச நீதியமன்றத்தின் எச்சரிக்கைக்கு, பின்பு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிலுவை தொகை குறைக்கப்பட போவதில்லை என்பதால், அவற்றின் எதிர்காலம் சற்று யோசிக்க வேண்டிய விஷயமாகத் தான் இருக்கிறது. அதிலும் வோடபோன் ஐடியாவி நிலை சற்று மிக மோசமாகவே உள்ளதாகவும் கருதப்பட்டது. இதனால் வோடபோன் ஐடியா பங்கின் விலையானது இன்று 23.21% வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் பார்தி ஏர்டெல்லின் பங்கு விலையானது 4.69% ஏற்றம் கண்டு 565.10 ரூபாயாகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone idea shares plunges 25% airtel jumps 4% after SC orders

Shares of Tele companies fell following the scolding by the court, particularly Vodafone idea slumped 23.21$ to Rs.3.44, Bharti airtel price4.69% up to Rs.565.10 in today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X