இந்தியாவின் டாப் 3 டெலிகாம் சேவை நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா கடந்த 2 நாட்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 30 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த அதிரடி வளர்ச்சிக்கு என்ன காரணம் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
வோடாபோன் ஐடியா
வோடாபோன் ஐடியா நிறுவனம் அதிகளவிலான கடன் மற்றும் நிலுவை கட்டணங்கள் இருப்பது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர் எண்ணிக்கையை வேகமாக இழந்து வருகிறது. இதற்கிடையில் ஏர்டெல் நிறுவனத்துடன் சேர்ந்து டெலிகாம் கட்டணத்தையும் உயர்த்த தயாராகியுள்ளது.
இந்நிலையில் நிறுவனத்தைத் திவால் ஆவதில் இருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் மொத்த வோடபோன் ஐடியா நிறுவனமும் இயங்கி வருகிறது.
குமார் மங்களம் பிர்லா
இதற்கிடையில் வோடபோன் ஐடியா நிறுவனம் குறித்து மத்திய அரசுக்கு நேரடியாகத் தெரிவிக்கும் விதமாக வோடபோன் ஐடியா-வின் முக்கியப் பங்குதாரரான குமார் மங்களம் பிர்லா டெலிகாம் துறை அமைச்சரான ஆஷ்வனி வைஷ்னவ்-ஐ நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.
வோடபோன் குரூப் தலைவர்
இதே நாளில் வோடபோன் குரூப் தலைவர் நிக்-ம் இந்தியாவில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசும் வோடபோன் ஐடியா நிறுவனத்தைக் காப்பாற்ற சில முக்கியமான தளர்வுகள் அளிக்கத் திட்டமிட்டு வருகிறது.
வோடபோன் ஐடியா மூத்த அதிகாரிகள்
இதற்காக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கடந்த ஒரு வார காலமாகவே அரசு அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து வருகின்றனர். ஆனால் குமார் மங்களம் பிர்லா மற்றும் ஆஷ்வனி வைஷ்னவ் சந்திப்பு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
வோடாபோன் ஐடியா பங்குகள்
இதன் வாயிலாகவே வோடாபோன் ஐடியா பங்குகள் ஆகஸ்ட் 31ஆம் தேதியில் 5.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பங்குகள் இன்று காலையில் 8 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2 நாட்களில் 30 சதவீத உயர்வைப் பதிவு செய்த வோடபோன் ஐடியா பங்குகள் இன்று வர்த்தக முடிவில் 7.20 ரூபாய் விலையில் முடிவடைந்துள்ளது. இந்த உயர்வு வோடபோன் ஐடியா பங்கு முதலீட்டாளர்களுக்குக் கணிசமான உயர்வைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
குமார் மங்களம் பிர்லா-வின் கடிதம்
இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பெரும் பங்கு உரிமையாளரான குமார் மங்களம் பிர்லா தன்னிடம் இருக்கும் 27 சதவீத பங்குகளை அரசுக்கோ அல்லது அரசு கைகாட்டும் நிறுவனத்திற்குக் கொடுக்கத் தயார் என்று நாடாளுமன்ற செயலாளர் ராஜீவ் குப்பா-விற்குக் கடிதம் எழுதியது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
வோடபோன் plc சிஇஓ நிக்
இதேவேளையில் வோடபோன் plc நிறுவனத்தின் சிஇஓ நிக் இனி இந்தியாவிற்கு எவ்விதமான பங்கு முதலீடுகளும் எங்கள் தரப்பில் இருந்து வராது எனச் சந்தை ஆய்வாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
20 வருட காலம் அவகாசம்
மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்களுக்கு AGR கட்டணங்களைச் செலுத்த 20 வருட காலம் அவகாசம் கொடுத்த நிலையில், இத்தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் அடுத்த 10 வருடத்தில் அதாவது மார்ச் 31, 2031க்குள் AGR கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மத்திய அரசின் முயற்சி
இந்நிலையில் மத்திய அரசு தற்போது வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் தங்களது கட்டண நிலுவையை 20 வருடத்தில் திரும்பிச் செலுத்தும் சலுகையை அளிக்க முடியுமா என்றும், அதற்கான வழிமுறைகள் என்ன..? கட்டமைப்புகள் என்ன..? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
30,000 கோடி ரூபாய் கடன்
வோடபோன் ஐடியா நிறுவனம் அரசுக்கும், இந்திய வங்கிகளுக்கும் சுமார் 30,000 கோடி ரூபாய் அதாவது 4.04 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கடனாகவும், நிலுவை தொகையாகவும் அளிக்க வேண்டும்.
வங்கிகளின் கடன்
வோடாபோன் ஐடியா நிறுவனத்திற்கு யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, இண்ட்ஸ்இந்த் வங்கிகள் அதிகளவிலான கடனை கொடுத்துள்ளது. இந்த 4 வங்கிகளுடன் இன்னும் பல தனியார் மற்றும் அரசு வங்கி, நிதி நிறுவனங்கள் கடன் கொடுத்துள்ளது.
எஸ்பிஐ வங்கி தலைவர்
கடந்த ஒரு வாரத்தில் வோடபோன் ஐடியா- அரசு மத்தியில் நடந்த கூட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மற்றும் சிஇஓ ரவிந்தர் தாக்கர், எஸ்பிஐ வங்கி தலைவர் தினேஷ் குமார் காரா மற்றும் டெலிகாம் துறை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோரும் இணைந்து ஆலோசனை செய்துள்ளனர்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications