நாட்டின் முன்னணி தொலைதொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவனமாக வோடபோன் ஐடியா உள்ளது. இந்த நிறுவனம் தற்போது நோக்கியா, சோனி எரிக்சன் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி ரூ.30,000 கோடி மதிப்பிலான இந்த மிகப்பெரிய ஒப்பந்தத்தில் தொழில் வளர்ச்சிக்காக நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த 3.6 பில்லியன் டாலர்கள் அதாவது 30,000 கோடி ரூபாய் பரிவர்த்தனை தொடர்பான நடைமுறைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இது மூன்று ஆண்டுகளுக்கு நெட்வொர்க் உபகரணங்களை வழங்குவதற்கான ஒப்பந்தமாகும்.
வோடபோன் ஐடியா இன்று சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆவணத்தில், புதிய ஒப்பந்தம் தொடர்பான நடைமுறைகள் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக ஒத்துழைத்து வரும் நோக்கியா மற்றும் எரிக்சன் நிறுவனங்களுடனான தனது கூட்டுறவை தொடரும் என்றும், சாம்சங் நிறுவனமும் புதிய பங்குதாரராக வரும் என்றும் அந்த நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க 6.6 பில்லியன் டாலர் (ரூ. 55,000 கோடி) மதிப்பை நோக்கிய கேபெக்ஸை உயர்த்துவதற்கான முதல் படி எனவும், இது 4G கவரேஜை 1.03 பில்லியனில் இருந்து 1.2 பில்லியனாக அதிகரிப்பதற்கான திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், முக்கிய சந்தைகளில் 5G ஐ அறிமுகப்படுத்துதல் மற்றும் டேட்டா வளர்ச்சியுடன் திறனை அதிகரிப்பது ஆகியவை முக்கிய நோக்கங்களாக இந்த ஒப்பந்தம் இருக்கும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய சந்தையில் விற்பனையாளர்களால் பெறப்பட்ட மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பயன்படுத்துவதற்கும், பயன்படுத்தக்கூடிய சமீபத்திய உபகரணங்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் வோடஃபோன் பெறும் எனவும், 4G மற்றும் 5G தொழில்நுட்பங்களுக்கான சேவைகளைத் தனிப்பயனாக்குவதன் மூலம் தொலைதொடர்பு துறையில் மிகவும் சிறப்பான வெளியீட்டுத் திட்டத்தைப் பின்பற்ற இது உதவும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது. இது கூடுதலாக, புதிய உபகரணங்கள் ஆற்றலில் செயல்திறன் ஆதாயங்களுக்கும் வழிவகுக்கும் எனவும், இதனால் இயக்க செலவுகள் குறையும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
வோடபோன் ஐடியா செப்டம்பர் 2020 முதல் நிதி திரட்ட முயற்சித்து வருகிறது. மேலும் நிதி பற்றாக்குறை காரணமாக அதன் 4G நெட்வொர்க்கை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய முடியவில்லை. போட்டியாளர்களான ஏர்டெல் மற்றும் ஜியோ கடந்த அக்டோபர் 2022 முதல் 18 மாதங்களுக்குள் நாடு முழுவதையும் அவர்கள் சேவையை விரிவுபடுத்திய நிலையில், 2022ல் மீண்டும் ஸ்பெக்ட்ரம் வாங்கிய போதிலும், வோடஃபோன் ஐடியா 5G ஐ அறிமுகப்படுத்த முடியவில்லை. நஷ்டத்தில் இருக்கும் வோடபோன் ஐடியா 2.1 டிரில்லியன் டாலர் கடனில் சிக்கியுள்ளது. இதில் 1.39 டிரில்லியன் டாலர் ஆனது ஒத்திவைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் மற்றும் ரூ.70,300 கோடி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவையில் உள்ளது.
சமீபத்தில், வோடபோன் ஐடியா பங்குச் சந்தையின் மூலம் ரூ.24,000 கோடி மூலதனத்தை ஃபாலோ-ஆன் பப்ளிக் சலுகை மூலம் திரட்டியது. இதன் ஸ்பெக்ட்ரம் ஜூன் 2024ல் ரூ.3,500 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. மிக விரைவாக மூலதனத்தை திரட்ட முயற்சிப்பதுடன், நீண்ட கால ஒப்பந்தங்களையும் நிறுவனம் முடிக்க முயற்சித்து வருகிறது. புதிய ஸ்பெக்ட்ரம்கள் மூலம் ஏற்கனவே உள்ள தளங்களின் செயல்திறனை அதிகரிக்கவும் புதிய தளங்களை வெளி கொண்டு வருவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், நிறுவனம் 15% திறன் அதிகரிப்பை எட்டியுள்ளது. மேலும், இந்த மாதத்திற்குள் மக்கள் தொகை 1.6 கோடியாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கூட்டத்தை நாளை செப்டம்பர் 23-ம் தேதி நடத்தப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை வோடபோன் ஐடியா பங்குகள் 1.35% உயர்ந்து ரூ.10.52 ஆக இருந்தது. 2024 இல் இதுவரை பங்கு விலையில் 38% சரிவுடன் உள்ளது.


Click it and Unblock the Notifications