சென்னை: இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi), தனது சக போட்டியாளர்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றுடன் நேருக்கு நேர் போட்டிப்போட மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஆனால் இத்திட்டத்தைச் செயல்படுத்த வோடபோன் ஐடியாவுக்கு பெரும் நிதி ஆதரவு தேவை, தற்போதைய நிலையில் வோடாஃபோன் ஐடியாவின் தாய் நிறுவனங்களான பிரிட்டன் நாட்டின் வோடாஃபோன் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமம் இத்திட்டத்திற்குத் தேவையான மொத்த தொகையைச் சொந்தமாக உட்செலுத்த முடியாத காரணத்தால் பிற வழிகளில் நிதியைத் திட்ட முடிவு செய்துள்ளது.

வோடபோன் ஐடியா தனது சேவை விரிவாக்கத்திற்கான மூலதனத்தைத் திரட்ட, வங்கிகளிடம் ரூ.23,000 கோடி கடனாகப் பெறும் திட்டத்தை எஸ்பிஐ வங்கி தலைமையிலான கூட்டணியிடம் முன் வைத்துள்ளது. இதனுடன் ரூ.10,000 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தையும் (bank guarantees) கோரியுள்ளது வோடபோன் ஐடியா நிர்வாகம்.
வோடபோன் பிஎல்சி (Vodafone Plc) மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் கூட்டணி தான் வோடபோன் ஐடியா நீண்ட காலமாக நிதி திரட்டும் திட்டத்தை வங்கிகளிடம் முன்வைத்த நிலையில் தொடர் தோல்விகள் மட்டுமே மிஞ்சியது. ஆனால் தற்போது வோடபோன் ஐடியா வங்கிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வியாபாரத்தில் அதிக பங்குகளை (equity) வைக்க ஒப்புக்கொண்டது.
சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பில் கடன் கோரும் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்தின் படி வோடபோன் ஐடியா தனது 4G கவரேஜை மேம்படுத்துவதற்கும், முக்கிய சந்தைகளில் புதிய 5G சேவையைத் தொடங்குவதற்கும் ரூ.55,000 கோடி மூலதனம் தேவைப்படுவதாகத் தனது திட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் ரூ.23,000 கோடியை வங்கி கடனாக பெற திட்டமிடப்பட்டுள்ளது.
2024 மார்ச் காலாண்டு முடிவில் வோடபோன் ஐடியா-வின் பங்கு இருப்பு தகவலில் மத்திய அரசு வோடபோன் ஐடியாவில் 32.19% பங்குகளை வைத்திருக்கிறது. இருப்பினும், இந்தியக் குடியரசுத் தலைவரின் பெயரில் உள்ள பிற அரசு பங்குகளைப் போல் இல்லாமல், வோடபோன் ஐடியாவின் பங்குகளை மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையால் (DIPAM) நிர்வகிக்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications