இந்தியாவின் 3வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக, அதன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய பொழுதுபோக்கு ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
"வி மூவிஸ் அண்ட் டிவி" (Vi Movies and TV) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஆப் ஒரே இடத்தில் ஓடிடி (OTT) கன்டென்ட் மற்றும் லைவ் டிவி சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேவை வழங்கி, கூடுதல் வருமானத்தைப் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இந்த புதுமையான ஆப் மூலம் 13 க்கும் மேற்பட்ட பிரபலமான ஓடிடி தளங்களையும், 400 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும், ஷீமாரூ மற்றும் ஹங்காமா ஆகிய நிறுவனங்களின் திரைப்பட தொகுப்புகளையும் இலவசமாகப் பார்க்க முடியும்.
வோடாபோன் ஐடியா-வின் Prepaid வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய வி மூவிஸ் அண்ட் டிவி-யின் சேவையின் கட்டணம் ரூ.202 ஆகவும், Postpaid வாடிக்கையாளர்களுக்கு ரூ.199 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல ஓடிடி தளங்களுக்காக தனித்தனியே கட்டணம் செலுத்துவதை விட, ஒரே கட்டணத்தில் பலதரப்பட்ட பொழுதுபோக்கு சேவைகளைப் பெறும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ், மனோராமா மேக்ஸ், ஹாட்ஸ்டார், நம்மஃப்ளிக்ஸ், க்ளிக்க, சௌபால், ப்ளேஃப்ளிக்ஸ் போன்ற பிரபலமான ஓடிடி தளங்களை "வி மூவிஸ் அண்ட் டிவி" ஆப் வழங்குகிறது. அதோடு, டிஸ்கவரி, ஆஜ் தக், ரிபப்ளிக் பாரத், ஏபிபி, இந்தியா டுடே போன்ற 400 க்கும் மேற்பட்ட பிரபல டிவி சேனல்களையும் இந்த ஆப் மூலம் காணலாம்.

ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள் மற்றும் இணையதளம் வழியாகவும் "வி மூவிஸ் அண்ட் டிவி" ஆப்பை அணுகலாம். மேலும், ஒரே நேரத்தில் இரண்டு கருவிகளில் இருந்து ஓடிடி தளங்களில் கன்டென்ட்-களை இந்த ஆப் மூலம் பார்க்க முடியும்.
எனவே, பல்வேறு ஓடிடி தளங்களுக்காக தனித்தனியே கட்டணம் செலுத்துவதைத் தவிர்த்து, குறைந்த விலையில் ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு "வி மூவிஸ் அண்ட் டிவி" சிறந்த தேர்வாக இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications